praveenkumar558@gmail.com
Follow on
Thursday, April 25, 2019

தமிழ் நாட்டில் ஏன் மோடி எதிர்ப்பு?

மோடியின் மீது தமிழ் நாட்டு மக்கள் இவ்வளவு வெறுப்பாக இருப்பதற்கு காரணம் இரண்டு,
  1. கள்ள மௌனம்
  2. கள்ள ஆதரவு
2014ஆம் ஆண்டு மோடி அவர்கள் எதை சொல்லி ஆட்சிக்கு வந்தாரோ அதற்கு எதிராக செயல் படுகிறார் என்பது தான் வருத்தம். ஊழலுக்கு எதிரானவராக தன்னை கூறி கொள்ளும் மோடி அவர்கள், தமிழ் நாட்டை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஊழல் ஆட்சியை நேரடியாக கட்டுப்படுத்துகிறார்.கூடுதல் சிறப்பாக ஊழலில் திளைத்து, தமிழ் நாட்டை கூறு போட்டு விற்கும் அதிமுக உடன் தேர்தல் கூட்டணி வைக்கின்றார். இவ்வாறு செய்தால் எப்படி அவருக்கு தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு தருவார்கள். மோடியின் இந்த கள்ள ஆதரவு தான் மக்கள் விரும்பவில்லை. அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.



H.ராஜா, S.V. சேகர், தமிழிசை,நிர்மலா சீதாராமன் என்று தமிழ் நாட்டை சேர்த்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் தொடர்ந்து தமிழ் நாட்டிற்கும் தமிழ் நாட்டு மக்கள் விரும்பாத பல விஷயங்களை பொது வெளியில் கூறும் போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காக்கும் மோடிக்கு எப்படி தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு தருவார்கள்.?

எந்த ஒரு மத பாகுபாடு இன்றி வாழும் தமிழ் மக்களிடம் மதவாதம் என்னும் நஞ்சை விதைத்து தமிழ் நாட்டில் எப்படியாவது கால் பதித்து விடலாம் என்று நினைக்கும் மோடியை எவ்வாறு தமிழ் மக்கள் விரும்புவார்கள். மோடி, பாரதீய ஜனதா கட்சி, சங் பரிவார்கள் நம்புவது ஹிந்துவாவை. தமிழ் நாட்டில் வாழும் ஹிந்துக்கள் நம்புவது ஹிந்துமதத்தை. ஹிந்து மதம் மூலம் ஹிந்துத்துவாவை உள்ளே கொண்டு வரலாம் என்று நினைக்கும் எண்ணம் ஒரு போதும் தமிழ் நாட்டில் நடக்காது.
இதை திட்டமிட்டு செய்யும் மோடி அவர்க்ளை எவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் விரும்புவார்கள்.?

குறிப்பு: தேசியம் என்னும் பெயரில் தமிழ் நாட்டை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் மோடி வாழ்க என்று கோஷம் போடுபவர்கள் பற்றி எதுவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதில் நீங்களும் ஒருவர் என்றால் தயவு செய்து பின்னூட்டத்தில் வந்து வாந்தி எடுக்க வேண்டாம்.

Yes, #GoBackModi from Tamil Nadu will trend forever.

நன்றி
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: தமிழ் நாட்டில் ஏன் மோடி எதிர்ப்பு? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran