praveenkumar558@gmail.com
Follow on
Sunday, April 21, 2019

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்?

இந்த தேர்தலை சென்ற நாடாளுமன்ற தேர்தல் தரவுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்வது சரியாக வராது. அதற்கு அப்பறம் சட்டமன்ற தேர்தல் ,இரண்டு பெரிய தலைவர்களின் இறப்பு போன்றவை நடந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் தரவுகள் ஒரு அளவிற்கு ஒத்துப்போகும். எனவே அதை வைத்து பார்க்கலாம். சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ஒரு 1% சதவீதம் தான். 


அதிமுக வாங்கிய ஓட்டு முழுக்க முழுக்க ஜெயலலிதாவிற்காக விழுந்த ஓட்டுகள். இன்று ஜெயலலிதாவும் இல்லை. அதிமுக என்னும் கட்சியும் பிளவு கொண்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் செல்வாக்கு என்பது இல்லவே இல்லை. கண்டிப்பாக இந்த வாக்கு சதவீதம் 15%- 20% கீழ் செல்லும். பெருவாரியான அதிமுக வாக்குகளை தினகரன் பெறுவார். 

பாமக வாங்கிய வாக்கு சதவீதம் 5.3% . தவறான கூட்டணி மூலமாக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். எனவே இந்த தேர்தலில் 5.3 % குறைவதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது. 2 - 3% வாக்குகள் கிடைக்கும். அதுவும் வட மாவட்டடங்களில் மட்டும் தான். 

பாரதீய ஜனதா கட்சி + தேமுதிக வாங்கிய வாக்குகள் சேர்த்து போட்டால் 5% வரும் . மோடி எதிர்ப்பு மற்றும் விஜயகாந்த் உடல் நலம் சரி இல்லாதது போன்றவற்றை பார்த்தால் குறைவாக தான் இருவர்களும் வாங்குவார்கள். 2.5 - 3 %. 

ஆக மொத்தம் எல்லாம் சேர்த்தால் அதிமுக கூட்டணி 22 - 25% வாக்குகள் வாங்கும். ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தான் கள நிலவரம். 

அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக TTV தினகரன் இருப்பார்.!
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் யார் வெற்றி பெறுவார்? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran