praveenkumar558@gmail.com
Follow on
Monday, July 20, 2020

கந்த சஷ்டி கவசமும் கறுப்பர் கூட்டமும்

கறுப்பர் கூட்டம் என்ற Youtube Channel கந்த சஷ்டி கவசம் பற்றி வெளியிட்டு இருந்த வீடியோ வன்மையாக கண்டிக்க தக்கது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மதங்களை கடவுள்களை இழிவுபடுத்தும் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. அவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தான் என் கருத்து.

பழைய விடியோவை இப்போது எதுக்கு பேச வேண்டும்?. Corona தொற்று, தொழில் முடக்கம், OBC இட ஒதுக்கீடு போன்ற முக்கியமான விஷயங்கள் பேச வேண்டிய நேரத்தில் எதுக்கு பழைய வீடியோ பற்றி இப்ப பேசணும்?. இந்த பழைய விடியோவை பற்றி இப்ப அதிகமாக கத்தும் நபர்கள் யார் என்று பார்த்தால் அதில் ஒரு தெளிவு கிடைக்கும். அரசுகளின் தோல்வியை மறைக்க அவ்வப்போது இவர்கள் கத்துவார்கள் கொஞ்ச காலம் இது குறைந்து இருந்தது, இப்போது மீண்டும் ஆரமித்துள்ளது. காரணம் 2021 தேர்தல்.

பாரதிய ஜனதா கட்சியின் வழக்கமான அரசியலை தான் தமிழ் நாட்டில் செய்ய முயல்கின்றார்கள். சிறுபான்மை மக்களால் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்து என்ற பயத்தை உருவாக்கி அதில் சிறுது தேச பற்றை ஊற்றி, வாக்காக அறுவடை செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல். இதற்கு வலுவான RSS உதவி செய்யும், ஒரு வலுவான தலைவர் அறுவடை செய்வார்.

இதை தான் தமிழ் நாட்டில் செய்ய முயல்கிறார்கள். திமுகவை ஹிந்துக்கள் விரோத கட்சி என்று முத்திரை குத்த பார்க்கின்றார்கள். முருகனை வைத்து ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றார்கள்.

திட்டம் லாம் நல்லா தான் இருக்கு, ஆனால் இது தமிழ் நாட்டில் எடுபடாது. உதவி பண்ண வலுவான RSS கிடையாது, தலைவரும் கிடையாது. எனவே என்ன முக்குனாலும், பாரதிய ஜனதா கட்சி நோட்டவுக்கும் டெபாசிட்டுக்கும் தான் போட்டி போடணும். இது ஒன்னும் படிப்பறிவு இல்லாத வட இந்தியா இல்லை என்பதை இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: பெரும்பான்மை OBC இந்துக்களின் இட ஒதுக்கீடு பற்றியோ, தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை தமிழர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை பற்றி இவர்கள் ஆசன வாயை கூட திறக்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் நோக்கம் ஹிந்துத்துவா தானே தவிர ஹிந்து மதம் இல்லை.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கந்த சஷ்டி கவசமும் கறுப்பர் கூட்டமும் Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran