praveenkumar558@gmail.com
Follow on
Monday, May 7, 2018

கர்நாடக தேர்தல் - மாநில உரிமைக்கான போராட்டம்

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தலைவர் மாநில உரிமைகள் பற்றி பேசுவது மிக அரிது. BJP போல காங்கிரஸும் தேச பக்தர்களே. அதில் சித்தராமையா விதிவிலக்காக தெரிகிறார். காரணம் அவர் ஒரு மாநில கட்சியில் இருந்து காங்கிரஸ்க்கு வந்தவர் என்பதால் தான். காங்கிரஸ் தனி பெருமான்மை பெற்றால் அவர் தான் முதல்வரா என்பது சந்தேகம். தேச பக்தரான மல்லிகாஜுன கார்கேக்கு வாய்ப்புகள் அதிகம்.

அந்த பக்கமும் இதே நிலைமை தான். எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த மோடிக்கு உடன் பாடு இல்லை. அவர் ஜாதி தான் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வைத்தது. தனி பெரும்பான்மை பெற்றால் கண்டிப்பாக அவர் முதல்வராக வாய்ப்பு மிக குறைவு. மோடிக்கு நெருக்கமான ஆனந்த் குமார் தான் முதல்வர் ஆவார். இப்பவே இதை சொன்னால் எடியூரப்பவே பாஜகவை தோற்கடித்து விடுவார்.

ஒரு காலத்தில் தேசிய கட்சிகள் சவாரி செய்த ஜனதா தளம்,இந்த தேர்தலில் தன் இருப்பை காட்ட போராடுகிறது. ஒரு மாநில கட்சியை எப்படி ஒழிக்க முடியுமோ, அப்படி ஒழித்து இன்று தேசிய கட்சிகள் கர்நாடகாவை வளைத்து கொண்டுள்ளது. மாநில உரிமைகள் பேசும் சித்தராமையா வெற்றி பெறுவது தான் நல்லது. தொங்கும் சட்டசபை வந்தால் ஜனதா தளம் காங்கிரஸ்க்கு ஆதரவு தந்து, ஆட்சி செய்தால் மட்டுமே கர்நாடக முன்னேறும். மோடியின் அதிகமான பேச்சுக்கள்,எடியூரப்பாவின் ஊழல் பாஜகவை தோல்வி முகத்துக்கோ அல்லது மைனாரிட்டி ஆட்சி அமைக்க வழி வகுக்கும்.

சித்தராமையாவின் சமூக நீதி திட்டங்கள் மாநில நலன்கள் மற்றும் மோடியின் தெற்கை புறக்கணிக்கும் போக்கு வாக்காளர்கள் கண் முன்னாள் வந்தால் மீண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான். கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் திறமையான முதல்வர் இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கு இதில் எந்த நல்ல செய்தியும் இருக்கப்போவது இல்லை. 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கர்நாடக தேர்தல் - மாநில உரிமைக்கான போராட்டம் Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran