praveenkumar558@gmail.com
Follow on
Friday, July 20, 2018

திராவிடம் தலைக்கட்டும்..!

அன்னமிட்ட தாயின்
அன்னத்தில் குறை கண்டால் மகிழ்ச்சி,
அவள் ஜாதியில் குறை கண்டது வருத்தம்.
அவள் வடித்த உணவை உன்ன மாட்டோம் என்று பிஞ்சு நெஞ்சம் சொன்னதா.?
பிஞ்சு நெஞ்சில் வஞ்சை விதைத்தால்,
நஞ்சு காற்றில் பரவி நீயும் சாக நேரிடும்.
அன்னம் இட்ட அந்த கைகளுக்கு,
கைமாறு எதுவும் வேண்டாம்.
ரத்தமும் சதையும் கொண்ட பெண்,
என்ற மரியாதை மட்டும் போதும்.
சுயமரியாதை மண்ணில்,
ஜாதியுடன் வாழ விருப்பம் என்றால், வாழுங்கள்.
அதை பிஞ்சு நெஞ்சில் விதைக்காதீர்கள்.

ஜாதி என்பது இருமுனை கத்தி,
உங்களையும் ஒரு நாள் பதம் பார்க்கும். இன்று அவளுக்கு
நாளை உனக்கு.
மனிதனை பார்க்க ஜாதி தடுத்தால்,
உனக்கு எதுக்கு கல்வி.?
குப்பையில் போட்டு விடு.
புரக்குப்பை சுத்தம் செய்துவிடலாம்,
அகக் குப்பை?
அகக் குப்பை சுத்தமாகி

மனிதம் ஓங்கட்டும்
திராவிடம் தலைக்கட்டும்..


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திராவிடம் தலைக்கட்டும்..! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran