praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, July 18, 2018

Anna University Counselling Tips

அண்ணா பல்கலைக்கழகம் தனது 2018 ஆண்டுக்கான கலந்தாய்வை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. மாணவர்கள் பல கனவுகளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். கலந்தாய்வுக்கு செல்வதற்கு முன் என்ன என்ன விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றிய கட்டுரை இது. ஒரு நல்ல செய்தி என்னவென்றால் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அனுப்பிய எல்லோருக்கும் இந்த முறையும் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இருந்தாலும் மாணவர்கள் நினைவில்கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கலந்தாய்வுக்கு செல்லும் முன்னர் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் Cut off மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்பதை இந்த இணையத்தளம்(https://info.tnea.ac.in/tinfo/index.php) மூலமாக தெரிந்து கொள்ளலாம். கடந்த வருடங்கள் நடந்த கலந்தாய்வு அடிப்படையில் தகவல்கள் இருக்கும்.

உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரியை தேர்வு செய்த பின்னர் அந்த கல்லூரி பற்றி அந்த கல்லூரிகளின் இணையதளத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கூடங்கள் நூலகம் போன்ற வசதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கட்டிடங்கள் பார்த்து ஏமாற வேண்டாம். முன்னாள் மாணவர்களிடம் கல்லூரி பற்றி கேட்பது நல்லது.


எந்த கல்லூரியில் சேர போகிறோம் என்று முடிவு செய்த பின்னர், அந்த கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு Codeயை சரியாக குறித்து கொள்ள வேண்டும். ஒரே பெயரில் பல கல்லூரிகள் இருப்பதால், கலந்தாய்வு எண் வைத்து சரியான கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். தவறான கல்லூரியை தேர்வு செய்தால் பின்னர் மாற்ற இயலாது.

அண்ணா பல்கலைக்கழகம் சொல்லி இருக்கின்ற அனைத்தையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னையில் வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் எல்லாவற்றையும் முடித்து விட்டு கலந்தாய்வுக்கு வரவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே சென்று விடுவது நல்லது.

நல்ல கல்லூரியை தேர்வு செய்து நாட்டுக்கு நல்ல Engineer ஆக வாழ்த்துக்கள்.

Follow me via Facebook,
https://www.facebook.com/praveenkumar.pr
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Anna University Counselling Tips Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran