praveenkumar558@gmail.com
Follow on
Thursday, May 21, 2020

ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா?

தமிழ் நாட்டில் COVID-19 விற்காக 144 தடை உத்தரவு போட்டு இருந்த பொழுது தமிழக அரசின் செயல்கள் மீது எதிர் கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு குறைகளை கூறினார். அதை ஸ்டாலின் அரசியல் செய்கின்றார் என்று பலர் கூறினார்கள். QUORA விழும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் எழுதிய பதில். 

தேவை தான்!

இது உலகம் முழுவதும் இருக்கின்ற பிரச்சனை. இதற்கு எல்லோரும் இணைந்து செயல் பட வேண்டு. தனி தனியாக இதை வெல்ல முடியாது. கூட்டு முயற்சி என்பது அவசியம். இதில் ஆளுங் கட்சி என்றோ எதிர் கட்சி என்றோ கிடையாது. எல்லோரும் சேர்ந்து தான் செயல் படம் வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் அதை உணர்ந்தார், எனவே இந்தியாவில் உள்ள அணைத்து கட்சி தலைவர்களுடன் பேசினார். அதே போல தான் தமிழ் நாட்டில் சர்வ கட்சி கூட்டம் நடத்தி, எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த பேரிடரை வெல்ல வேண்டும். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை சற்றும் மதிக்காமல், அணைத்து கட்சி கூட்டம் என்பது அவசியம் இல்லை. எதிர் கட்சியினர்களிடம் இருந்த எந்த ஆலோசனையும் தேவை இல்லை என்று கூறி விட்டார். இதனால் திமுக தனியாக செயல் படுகின்றது. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காத முதல்வர் மலிவான செய்லகளை செய்கிறாரா இல்லை ஸ்டாலின் செய்கிறாரா. ?



சரி, மலிவான அரசியலை ஸ்டாலின் செய்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள். அவர் ஒரு எதிர் கட்சி தலைவர். ஒரு எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் குரலை அரசுக்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆலோசனையும் கோரிக்கைகளும் குறைகளையும் ஒரு எதிர் கட்சி தலைவர் மக்களின் பிரதிநிதியாக கூறனால் அது மலிவான அரசியலா ?. ஒரு எதிர் கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் அவர்கள் செய்வது சரியே. ஒன்னு ஒற்றுமையாக செய்வோம். இல்லை என்றால், நான் தொடர்ந்து மக்களின் குறைகளை எடுத்து கூறி கொண்டே இருப்பேன் என்பது தான் ஸ்டாலின் அவர்களின் எண்ணம். அது அரசியல் என்றால் நீங்கள் நினைத்தால், அதற்கு ஒண்ணும் பண்ண முடியாது.

இந்த அரசை எந்த கேள்வியையும் கேட்க கூடாது. விமர்சனம் செய்ய கூடாது என்று நினைப்பது எந்த வகையான புத்தி என்று தெரியவில்லை. இது போன்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீதும் திமுக மீதும் அடிக்கடி வைக்கப்படுவது தான். பின்னாளில் அவர்கள் செய்தது சரியே என்று பலரும் ஏற்றுக்கொண்டது தான் உண்மை. அதற்கு ஒரு உதாரணம் ஜெயலலிதா அவர்களின் மரணம். ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொழுது கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவின் புகை படத்தை வெளியே விட வேண்டும் என்றார். கலைஞர் அரசியல் செய்க்கின்றார் என்றார்கள். கலைஞரை திட்டி தீர்த்தார்கள். கடைசியில் ஜெயலலிதாவின் பிணம் தான் வெளியே வந்தது.


இன்று வரை மக்களுக்கு ஜெயலலிதா எவ்வாறு மரணித்தார் என்று தெரியவில்லை. பலரும் அதில் எதோ ஒரு மர்ம இருக்கின்றது என்று இன்றும் நம்புகின்றார்கள். கலைஞர் கேட்டதை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால் இந்த தேவை இல்லாத மர்ம எதற்கு? மக்களுக்கு தங்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று தெரிய வேண்டும் என்ற ஏக்கம். எதோ மர்மம் இருக்கின்றது என்று நினைத்தார்கள் . மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்ட கலைஞர் புகைப்படம் வெளியிட வேண்டும் என்று கேட்டார். இன்று கூறுவது போல அது மலிவான அரசியலாக தான் அன்று தோன்றியது. ஆனால் இன்று அவர் கேட்டது சரி என்று தோன்றுகின்றது.

ஒரு சரியான எதிர் கட்சி என்பது அரசின் குறைகளை சுட்டி காட்டி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது. அதை தான் கலைஞர் செய்தார். இன்று ஸ்டாலின் அவர்களும் செய்கின்றார்.

அது மட்டும் இல்லை, திமுக என்பது ஒரு அரசியல் கட்சி. அரசியல் கட்சி அரசியல் பண்ணாம, மணி அடித்து விளக்கு பிடிச்சுக்கிட்டு இருப்பாங்களா?

நன்றி !
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran