praveenkumar558@gmail.com
Follow on
Monday, April 13, 2020

தமிழ் நாட்டில் இந்திமக்கள் அதிகரித்து வருவது நல்லதா கெட்டதா?

இங்கு இரண்டு சம்பவங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன்..

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான் தினம் கேட்க்கும் வார்த்தைகள்
"தமிழ் தெரியாதா. அப்பறம் எதுக்கு இங்க உக்காந்து இருக்க. எனக்கு லாம் தெரியாது. தமிழ் தெரியாத உன்ன எதுக்கு இங்க உக்கார வச்சு இருக்கானுங்க."
எங்கள் அப்பா கணக்கு வைத்து இருக்கும் Union bank of India வங்கியில் அதிகமாக எங்கள் அப்பா கேட்கும் வார்த்தைகள்
"தமிழும் தெரியாது. தமிழ் நாட்டோட கலாச்சாரமும் தெரியாத ஒருத்தர நகை கடன் பிரிவுக்கு போட்டு எல்லாரையும் கிறுக்கன் ஆக்குறாங்க."

இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் கடந்த 4 வருடம் தான் அதிகம். அதுவும் இந்த மோடி அரசு வந்ததுக்கு அப்பறம் தான் அதிகம். திட்டமிட்டு மோடி அரசு தமிழ் நாட்டில் இருக்கும் வேலைகளை வடக்கர்களுக்கு கொள்ளை அடிக்க உதவி செய்கின்றது . தமிழ் நாட்டின் காவல் தெய்வம் எடப்பாடி பழனிச்சாமி அதை பார்த்து ரசிக்கிறார் என்பது தான் உண்மை.
வட நாட்டவர்கள் இங்கு வரக்கூடாது என்பது என் கருத்து கிடையாது. தாராளமாக வரலாம். தங்கலாம். வாழலாம். இப்படி மக்கோளோடு தினம் தொடர்பில் இருக்கும் வேலைகளுக்கு தமிழ் தெரியாத ஒருவரை நியமனம் செய்வது தான் தவறு. அது ஒரு வகையான ஹிந்தி திணிப்பு தான். இனிமேல் நாங்க தான் எல்லாம். ஹிந்தி கத்துக்கோ னு சொல்லுற மாதிரி தான்.
இந்த மாபெரும் ஆபத்தை முன்னின்று அனுமதித்து இருப்பது நம்ம ஊரு எட்டப்பன்கள் தான். வரலாறு இவர்களை அசிங்கமாக பார்க்கும்.
குறிப்பு : தமிழ் நாட்டில் ஒரு கும்பல் உள்ளது. தமிழ் நாட்டை காட்டி கொடுப்பதற்கு என்று. தமிழ் நாடு நாசமாக போக வேண்டும் என்று. அந்த கும்பல் தான "இதுல என்ன இருக்கு னு கேக்கும்."
அவர்களுக்கு நான் எந்த பதிலும் கூற விரும்பவில்லை.
நன்றி
ஏப்ரல் 14 2020
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழ் நாட்டில் இந்திமக்கள் அதிகரித்து வருவது நல்லதா கெட்டதா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran