praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, June 2, 2020

IT நாயகன் கலைஞர்!

எதிர் காலம் சேவை துறையில் தான் உள்ளது என்பதை நன்கு உணர்ந்த கலைஞர், சென்னையை தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று அவர் போட்ட விதை தான் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்து உள்ள Tidel Park.

அவர் ஆட்சியில் கட்டிய அது தான் அன்றைய ஆசியாவின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா. பின்னர் ஆவர் ஆட்சியில் அமைத்த சிறுசேரி பூங்கா அந்த சாதனையை முறியடித்தது. Tidel Park உள்ளே நுழைத்த உடன் வலதுபுறம் பார்த்தால் ஒரு கல்வெட்டு இருக்கும். அந்த கல்வெட்டில் கல்லக்குடி கொண்ட அந்த கிழவனின் பெயர் இருக்கும்.

பின்வரும் புகைப்படம் Polaris நிறுவனத்தில் எடுத்ததாக அன்பார் ஒருவர் பகிர்ந்து.


இதில் என்ன வேடிக்கை தெரியுமா இது போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு சில அதிமேதாவிகள் தான் திராவிடத்தால் ஒழிந்தோம், கலைஞர் தமிழ் நாட்டை சீரழித்து விட்டார் என்று விஷத்தை இணையதளங்களில் கக்குகின்றார்கள்.

அந்த கிழவன் மட்டும் இல்லை என்றால் இன்று IT துறை தமிழ் நாட்டில் இவ்வளவு பெரிய ஆலமரமாக இருந்து இருக்காது.

திட்டுங்கள் அவரை. திட்ட திட்ட அவர் புகழ் ஓங்கும்.

வாழ்க கலைஞர் புகழ், நன்றி கலைஞர் !

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: IT நாயகன் கலைஞர்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran