praveenkumar558@gmail.com
Follow on
Saturday, July 4, 2020

ராணுவத்தை கேள்வி கேட்கலாமா?

பாகிஸ்தானில் ராணுவம் தான் எல்லாம். ராணுவம் தான் எல்லா அதிகாரமும் வைத்துள்ளது. ராணுவம் வைத்தது தான் அங்கு சட்டம். அங்கு பிரதமர் எல்லாம் டம்மி தான். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமர் ராணுவத்துக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் பிரதமராக நீடிக்க முடியாது. 

பிரதமர் மட்டும் இல்லை, ஊடகம் மக்கள் என்று யாரும் ராணுவத்தை கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால், அவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அரசியல் இலாபத்திற்காக   ராணுவத்தை பயன்படுத்தியத்தின் விளைவு தான் இன்று பாகிஸ்தான் ஒரு ராணுவ நாடக உள்ளது.



இதே போன்ற நிலையை தான் இந்தியாவில் உருவாக்குகிறார்கள் பக்தால்ஸ். மோடியை, பாரதிய ஜனதா ஜட்சியை கேள்வி கேட்டால், ராணுவத்தை கேள்வி கேள்விக் கேட்கிறார்கள், தேச துரோகிகள் என்று முத்திரை குத்துவத்தில் மும்முரமாக இருக்கின்றார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ராணுவதையும் கேள்வி கேட்கலாம். நாம் ஒன்னும் பாகிஸ்தான் கிடையாது.

பத்தால்ஸ் ஒன்னு புரிந்து கொள்ள வேண்டும்,ராணுவம் என்பது இருமுனை கத்தி, அதை ஒழுங்காக பிடிக்கவில்லை என்றால் நம்மையும் பதம் பார்க்கும். நிமிடம் இருப்பது எதிரிகளை மட்டும் சுடும் துப்பாக்கிகள் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ராணுவத்திற்கு அதிகாரத்தை குவிப்பது, ராணுவத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது போன்ற வற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ராணுவ புரட்சி ஏற்பட்டாலும் ஆச்சிரிய படுவதற்கு இல்லை. ராணுவ ஆட்சி எல்லாம் வந்துட்டா, சாவர்க்கர் மாதிரி ஷூ வ நோக்கி தான் போகணும். வேற வழி கிடையாது. 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ராணுவத்தை கேள்வி கேட்கலாமா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran