praveenkumar558@gmail.com
Follow on
Monday, November 15, 2021

சென்னையும் நானும்: மழை வெள்ளம் புயல் - 1

 நான் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் சென்னையில் வாழ்ந்து இருக்கின்றேன். 2015 ஆம் ஆண்டு வந்த செயற்கை வெள்ளம், அதற்கு பிறகு வந்த புயல் என்று பல்வேறு விதமான நிகழ்வுகளை அந்த 10 ஆண்டுகளில் சந்தித்துள்ளேன். கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு, அதிகமான தண்ணீர் என்ற இரண்டு விதமான சூழ்நிலைகளையும் பார்த்து உள்ளேன்.

 கடற்கரை ஓரம் இருக்கும் நகரங்கள் பெரும்பாலும் இயற்கை சீற்றங்களை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். கடலில் உருவாகும் புயலோ காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, முதலில் தொடும் நகரம் என்பதினால், கடற்கரை ஓரம் இருக்கும் நகரங்களுக்கு எப்போதும் ஆபத்து இருக்கும். இதில் சென்னை விதிவிலக்கு கிடையாது.

 மும்பைக்கும் இதே போல பிரச்சினைகள் உண்டு. மழை காலத்தில் மும்பை நகரம் தண்ணீரில் மிதக்கும். இயற்கை ஏற்படுத்தும் சீற்றங்களை மக்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நவீன தகவல் தொழில்நுட்ப காதலத்தில், பாதுகாத்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. ஒரு புயல் எங்கே உருவாகி எங்கே செல்லும் என்பதை எளிதாக கணித்து விட முடியும். அப்படி ஒரு கணித்த புயலில் ஒரு முறை நான் மாட்டிக்கொண்டேன். 2015 ஆம் ஆண்டு கதையை பிற்பாடு எழுதுகிறேன், இப்போது 2017 ஆம் ஆண்டு வந்த ஓக்கி புயல் பற்றி பார்க்கலாம்.

 ஓக்கி புயல் வந்த நேரத்தில் நான் சென்னை கிரோம்பேட்டை யில் தனியாக தங்கி இருந்தேன். ராதா நகரில் உள்ள ஒரு தெருவின் கடைசி வீட்டில், கீழ் வீட்டில் இருந்தேன். ஒரு சனிக்கிழமை காலையில் வீட்டில் படுத்து கொண்டு இருந்தேன். வெளியில் விடாது மழை பெய்து கொண்டு இருந்தது. ஓக்கி புயல் கரையை கடக்கும் வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி வந்தது. காலை உணவை முடித்து விட்டு, சிறப்பான தூக்கத்திற்கு சென்று விட்டுட்டேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாத அளவிற்கு ஒரு தூக்கம்.  தண்ணீர் குடிக்கலாம் என்று கட்டிலில் எழுந்து காலை தரையில் வைத்தேன். தொண்டைக்குள் செல்ல வேண்டிய தண்ணீரை கால்களில் உணர்ந்தேன். வீடு முழுவதும் தண்ணீர். அப்போது என்னிடம் இருந்த விலை உயர்ந்த பொருள் என் செல்போன் மட்டும் லேப்டாப் மட்டும் தான். வீடு முழுவதும் தண்ணீர். Chair மட்டும் table மிதக்கிறது. மெதுவாக வீட்டின் கதவை திறந்து பார்த்தால், தெரு முழுவதும் தண்ணீர். கதவை திறந்த உடன், வீட்டிற்குள் தண்ணீர் வேகமாக வந்தது. மாடியில் இருந்த வீட்டு ஓனர், கீழே இறங்கி வந்து கதவை அடைத்து விட்டு மாடிக்கு வருமாறு அழைத்தார். நானும் கதவை அடைத்துவிட்டு மாடிக்கு சென்றுவிட்டேன். தலையை துடைப்பதற்கு துண்டு, படுத்து கொள்ள கட்டில், மூன்று வேலை உணவு தந்து என்னை பார்த்துக்கொண்டார் வீட்டு ஓனர். இன்றும் அவருக்கு எனக்கு செய்த உதவியை மறக்க மாட்டேன். ஒரு வகையில் அது அவரின் கடமையாக இருந்தாலும், நான் அவர் எனக்கு செய்த உதவியாக தான் பார்க்கிறேன். பல மாதங்கள் கீழே இருந்தாலும், அவர் வீட்டிற்கு சென்றது அதுவே முதல் முறை. கூச்சம் காரணமாக சென்றது இல்லை. மழை என் கூச்சத்தை கரைத்து அவர் வீட்டிற்கு சென்று உணவே உன்ன வைத்து விட்டது. 

மறுநாள் மழை நின்று விட்டது. ஆனலும், தெருவில் இருந்த நீர் வடியவில்லை. வடியவில்லை என்பதை விட, தண்ணீர் போக வழி இல்லை என்பது தான் உண்மை. காரணம், தண்ணீர் செல்ல வேண்டிய வாய்காளை மறைத்து வீடுகள் பல உள்ளது. அதிகமான மழை பெய்தால், இது தான் நிலைமை.

 மழை விட்டதால், வீட்டு ஓனர் வீட்டில் இருக்க கூச்சமாக இருந்தது. ஒரு pant shirt எடுத்து கொண்டு, நண்பர்கள் ரூம் க்கு சென்று விட்டேன். சுமார் இரண்டு நாட்கள் கழித்து, தான் மீண்டும் என் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஏப்ரல் மாதம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது, தண்ணீரை பார்த்து பயன்படுத்த வேண்டும் என்று வீட்டு ஓனர் கூறினார். அதே வருடம், நவம்பர் வீடு முழுவதும் தண்ணீர். இது தான் இயற்கையின் விசித்திரம் என்று கூற வேண்டும்.

குறிப்பு: போதிய நீர் மேலாண்மை கிடையாது. அதனால் தான் இவ்வாறு நடக்கின்றது என்று ஒரு சிலர் தொடர்ந்து பேசி கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாரும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அப்புற படுத்த வேண்டும் என்று கூற மாட்டார்கள். ஒன்னும் இல்லை என்றால், காமராசர் க்கு பிறகு தமிழ் நாட்டில் அணைகள் கட்டவில்லை என்று கூறுவார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறுவது ஒன்றே ஒன்று தான்,

நினைத்து இடத்தில் எல்லாம் அணைகள் கட்ட முடியாது. அணை ஒன்னும் கக்கூஸ் கிடையாது, நினைத்த இடத்தில் எல்லாம் கட்டுவதற்கு. 

எனவே, கொஞ்சம் அனத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..


Keep calm and accept the nature 😀


நன்றி

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும்: மழை வெள்ளம் புயல் - 1 Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran