praveenkumar558@gmail.com
Follow on
Sunday, July 31, 2022

Branding : சென்னை chess Olympiad

ஒரு நாடு அந்நிய முதலீடு மற்றும் வருமானம் பெறுவதற்கு branding என்பது மிக முக்கியமான ஒன்று. தங்களிடம் இருக்கும் தகுதியை அவ்வப்போது வெளிக்காட்டி கொண்டே இருக்க வேண்டும். இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு, அமெரிக்கா இதை மிக சரியாக செய்தது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஒரு சில துறைகள்

1. சினிமா

2. ராணுவம்

3. ஆராய்ச்சி

4. விண்வெளி

5. விளையாட்டு 

இந்த 5 துறைகளிலும் தங்கள் நாடு தான் சிறந்தது என்று அவ்வப்போது காட்டிக்கொண்டே இருந்தார்கள். ஒலிம்பிக்ஸ் இல் அதிகமான பதக்கங்கள், அவதார் போன்ற படங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் தொடந்து புதிது புதிதாக எதையாவது செய்வது, நோபல் பரிசு, ஆஸ்கார் விருதுகள் என்று பல்வேறு branding மூலம் தங்கள் நாடு தான் சிறந்த நாடு என்று உலகிற்கு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பல்வேறு அந்நிய முதலீடு மற்றும் வருமானங்கள் அமெரிக்காவிற்கு தொடர்ந்து வருவதற்கு காரணம். 


உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், உயர் கல்வி. அமெரிக்கா செய்யும் தோடர் branding மூலம், உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அமெரிக்க பல்கலை. நோக்கி செல்கின்றனர். அமெரிக்கா செய்யும் branding மூலம், அங்கு தான் சிறந்த கல்வி கிடைக்கின்றது என்பதை உலகிற்கு காட்டி கொள்கின்றனர். உண்மையான தரமான கல்வியா இல்லை டுபாக்குர் கல்வியா என்பது வேற விடயம். மார்கெட்டிங் branding மூலம் நம்ப வைத்து விட்டார்கள். எல்லாரும் நம்பி விட்டார்கள். 

சென்னை chess Olympiad நிகழ்ச்சியும் ஒரு வகையான branding தான். Brand Tamil Nadu பற்றி உலகம் முழுவதும் எடுத்து செல்ல இது உதவும். உலக நாடுகள் அனைத்தும் சென்னை பற்றியும் தமிழ் நாடு பற்றியும் தெரிந்து கொள்ள இது போன்ற உலக அளவிலான நிகழ்ச்சிகள் உதவும். இது நம்மை நோக்கி முதலீடுகள் வருமானங்கள் வர உதவி செய்யும். வேலை வாய்ப்புகள் பெருகும் மற்றும் தொழில் வளர்ச்சியும் அடையும். இன்னமும் நாம் வளர்ச்சி அடையாத மாநிலங்களை பார்த்து பெருமை அடைந்து கொள்ளும் காலம் மாறிவிட்டது. இனி நாம் உலக நாடுகளுடன் போட்டியிட தேவையானவற்றை செய்ய வேண்டும். இந்த chess Olympiad போட்டி என்பது வெறும் தொடக்கம் தான்.

-பிரவீன் குமார் ராஜேந்திரன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Branding : சென்னை chess Olympiad Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran