praveenkumar558@gmail.com
Follow on
Sunday, April 9, 2017

என்ன படிக்கணும் ??

12 வகுப்பு முடித்தவுடன், எல்லோருக்கும் வரும் சந்தேகம் என்ன படிக்கலாம் என்று. முக்கால் வாசி மாணவர்களுக்கு என்ன மதிப்பெண் வர போகுது என்ற குழப்பமும் பயமும் தான் அதிகமாக இருக்கும். 

இந்த காலகட்டத்தில் எதை படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம், எதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று மாணவர்களின் தேடல் அதிகமாகவே இருக்கும். இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு பலர் அவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் எதையாவது உளறுவது வழக்கமான ஒன்று.ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை படிக்க சொல்லி மாணவர்களின் மனதை குழப்புவது தான் மிச்சம்.






ஒருவர் கூட, நீங்கள் விரும்பியதை படியுங்கள். உங்கள் விருப்பம் என்னவோ அதை தேர்ந்தெடுங்கள் என்று சொல்வது கிடையாது. நான் சொல்கிறேன்,

"உங்களுக்கு என்ன வரும் , உங்களுக்கு என்ன பிடிக்கும்,, எல்லாம் உங்களை விட வேற யாருக்கும் தெரியாது. உங்கள் பலம், விருப்பம் என்ன என்று நன்கு தெரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்து  எடுத்து  அதில் சிறப்பாக படித்தால், ஒன்று நல்ல வேலை கிடைக்கும் அல்லது  வேலை கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

எதை பற்றியும் குழப்பி கொள்ளாமல் விடுமுறையை கொண்டாடுங்கள். இது தான் உங்கள் வாழ்க்கையில் நீங்க கொண்டாட போகும் நீளமான விடுமுறை. இதற்கு அடுத்து நீங்கள் ஓய்வு பெரும் போது மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். 

உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றல் என்னை தொடர்பு கொள்ளலாம். 

நன்றி. 

பிரவீன் குமார் ராஜேந்திரன் 
praveenkumar558@gmail.com
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: என்ன படிக்கணும் ?? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran