praveenkumar558@gmail.com
Follow on
Thursday, June 29, 2017

அவன்அவள்!

மருத்துவர் இல்லை,
கிழித்து  எடுப்பதற்கு.
ஆசாரி இல்லை,
அறுத்து எடுப்பதற்கு.
வெட்டியான் இல்லை,
தோண்டி எடுப்பதற்கு.
கொலைகாரன் இல்லை,
வெட்டி எடுப்பதற்கு.

ஒற்றை நிமிடத்தில்,
ஒரு நொடியில்,
இவை அனைத்தும் நடந்தது.
நடத்தியது, நடத்தியவன்
அவன் அவள் கண்கள்!


ஆம் அவள் கண்கள்,
அவன் தான்!.
 அவள் இல்லை.
அவன் என்பதால்
தான் இத்துணை வேகம்.

அதே போல
அவன் கண்கள் அவள்.
அதனால் தான் என்னவோ
ஈர்ப்பு அதிகம்!
வெறுப்பு குறைவு.
கூர்மை அதிகம் !
கருணை குறைவு.

 அவள் கண்களில் அவன்
அவன் கண்களில் அவள்
எத்துணை அழகு!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அவன்அவள்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran