praveenkumar558@gmail.com
Follow on
Sunday, June 24, 2018

நிறுவனங்களின் தொடர் வேட்டை

Microsoft நிறுவனம் GitHub நிறுவனத்தை தங்களுடன் இணைத்ததை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில், Microsoft நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய இணைப்பு ஆகும். இதற்கு முன்னாள் LinkedIn நிறுவனத்தை இணைத்து கொண்டது. ஒரு பெரிய நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை வாங்குவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் Microsoft நிறுவனத்தின் இந்த இரண்டு இணைப்புகள் சற்று புருவத்தை தூக்க வைத்துள்ளது. இதற்கு காரணம், அடிப்படை தொழில் முறைக்கு எதிரான ஒன்றாகும். குறிப்பாக GitHub நிறுவனம் பெரும்பலும் open source technology பயன்பாட்டாளர்கள் பயன் படுத்தக்கூடிய ஒன்றாகும். Microsoft நிறுவனமோ வர்த்தக ரீதியில் செயல் படும் நிறுவனம். அதனால் இன்று பலரும் இந்த முடிவை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.


கடந்த காலங்களில் Facebook நிறுவனம், WhatsApp மட்டும் Instagram நிறுவனத்தை வாங்கி தனக்குள் இணைத்து கொண்டது. இதற்கு முக்கிய காரணம், இந்த இரண்டு நிறுவனத்தால் Facebook நிறுவனத்தின் செயல்பாடு குறைந்துவிட்டது. இந்த போக்கை தடுக்க, Facebook நிறுவனம்m இந்த இரண்டு நிறுவனத்தை வாங்கி கொண்டது. இந்த மூன்று நிறுவனமும் ஒரே தொழில் முறையான, Social networking ஐ அடிப்படையாக கொண்டது. எனவே இந்த இணைப்புகள் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த நிறுவனங்கள் வேட்டையில், அதிகமாக வாங்கப்படுவது இந்திய நிறுவனங்கள் தான். இதற்கு முக்கிய உதாரணம் Walmart நிறுவனம், Flipkart நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை வாங்கி, இந்தியாவிற்குள் அதிகார பூர்வமாக உள்ளே நுழைந்தது தான். பலவருடங்களாக உள்ளே நுழைய முடியாமல் இருந்த Walmart நிறுவனம், இந்திய நிறுவனத்தின் முகமூடியுடன் உள்ளே வந்துள்ளது. இந்தியாவில் Walmart நிறுவனம் கால் பாதிக்க இது ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அவர்கள் உள்ளே நுழைய, ஒரு இந்திய கனவு விற்கப்பட்டது என்று பலரும் கருதினர்.

இந்த மாதிரியான இணைப்புகள் IT துறையில் புதிது இல்லை. San Francisco இல் உள்ள பல சின்ன நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்குவது இயல்பான ஒன்று.இதில் அதிகமாக வாங்கப்படுவது Startup நிறுவனங்கள் தான். பல நிறுவனங்கள் வெறும் Startup நிறுவனமாக அழிந்து போவதற்கு முக்கிய காரணம் இது தான். நல்ல தொகைக்கு தங்களின் கனவுகளை விற்றுவிடுகின்றனர். இது சரியா தவறா என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பெரிய நிறுவனங்களை தவிர்த்து Startup நிறுவனங்களை வாங்குவதற்கு சில முக்கிய காரணங்கள்,

இந்த சிரிய நிறுவனங்களில் இருக்கும் innovation.

பெரிய நிறுவனங்கள் தங்களின் போட்டியை குறைக்க சரிய
நிறுவனங்களை வாங்குவது இயல்பு.

அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் நல்ல Engineers களை தங்களின் நிறுவனத்தின் இணைத்துக்கொள்ள

என்ற காரணங்கள் தான் இந்த தொடர் வேட்டைக்கு காரணம். இந்த வேட்டை தொடரும். இதை எதிர்கொண்டு, start-up நிறுவனத்தை பெரிய நிறுவனம் ஆக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தொழில் பெருகி வேலைவாய்ப்பு கூடும்.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நிறுவனங்களின் தொடர் வேட்டை Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran