praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, July 17, 2018

குழந்தைகளை கவனியுங்கள்!

7 மாதமாக ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். தன் குழந்தையை சுற்றி என்ன நடக்கின்றது என்று கூட தெரியாமல் பணம் பணம் என்று அலையும் பெற்றோருகளுக்கு இது ஒரு எச்சரிக்கை. தினம் குழந்தைகளுடன் பேச வேண்டும். என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கு 7 மாதம் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்பதை தெரியாத பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி. வளர்க முடியவில்லை என்ற பெற கூடாது. குழந்தை என்று இல்லை தவம் இருப்பவர்களுக்கு கொடுத்து விடலாம். தண்டனைகள் கடுமையாக வேண்டும், இருவருக்கும், சரியாக வளர்க்க தெரியாத பெற்றோர்களுக்கும், குழந்தை என்றும் பாராமல் நடந்து கொண்ட மிருகங்களுக்கும்..

இவ்வாறு உணர்ச்சி பொங்க வீர வசனங்கள் இரண்டு நாளைக்கு பேசுவார்கள் அப்பறம் அடுத்து நிகழ்வு வரும் வரை காத்து இருப்பார்கள். இது ஒரு தொடர்கையாக உள்ளது. வருத்தமான ஒன்று. சரி இது போன்ற குற்றங்களை தடுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நம் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பல போதனைகளை வழங்க வேண்டும்.குறிப்பாக sex என்றால் புனிதம் இல்லை அது அசிங்கமும் இல்லை என்பதை உடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விருப்பமற்ற பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இது விருப்பமற்ற பாலியல் குற்றங்களை வெளிப்படையாக தயக்கம் இன்றி கூற உதவும். மிருகங்களை விரைவில் அடையாளம் காண உதவும். இது மட்டும் இல்லாமல் ஒரு சில விஷயங்களில் பல மாற்றங்கள் தேவை.


குழந்தைகள் என்று வந்த உடன் தன்னலம் சார்ந்த காரியங்களை குறைத்து குழந்தைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நம் வீடுகளுக்கு அருகில் இருப்பவர்கள் ஒன்றும் மிருகங்கள் இல்லை. அருகில் இருப்பவர்களிடம் நல்ல உறவு மேற்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் அடுத்த வீட்டில் யார் உள்ளார்கள் என்று கூட தெரியாத மிருக வாழ்கை வாழ்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கண் இல்லை இரண்டு கண்களும் உங்கள் குழந்தை மீது இருக்கட்டும். இவ்வாறு செய்தால் பல குற்றங்கள் குறைந்துவிடும்.அழகான சமுதாயம் உருவாகும்.

அழகான சமுதாயத்தை உருவாக்க ஊர் கூடி தேர் இழுப்போம்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: குழந்தைகளை கவனியுங்கள்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran