praveenkumar558@gmail.com
Follow on
Saturday, July 14, 2018

திராவிட தலைவர் காமராஜ்

ராஜாஜி குலக்கல்வி திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து பள்ளிகளை இழுத்து மூடிய காலம். ராஜாஜி உடன் பல முரண்பாடு காரணமாக பெரியார் காங்கிரஸ்யை விட்டு வெளியே வந்து திராவிட கழகம் தொடங்கினார். இப்படியே விட்டால் ராஜாஜி நாசம் செய்து விடுவார் என்று எண்ணி, காமராஜரை குடியாத்தம் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தார். பெரியார் போட்ட முதல் விதை காமராஜர். அந்த விதை பின்னாளில் ராஜாஜி மூடிய பள்ளிகளை மீண்டும் திறந்தது. எங்கு எல்லாம் வாய்ப்புகள் உள்ளதோ அங்கெல்லாம் அணைகளை காட்டினார். பல தொழிற்சாலைகள் நிறுவினார். ராஜாஜி செய்த தவறுகளில் இருந்து தமிழகம் முன்னேற்ற பாதைக்கு சென்றது. இரண்டு முறை வென்றார் காமராஜர்.


பிரதமர்கள், ஜனாதிபதிகளை உருவாக்கினார். படித்த ராஜாஜிக்கு படிக்காத காமராஜர் மேல் என்று நிரூபித்தார். மூன்றாவது முறை வென்ற காமராஜரை முதல்வர் ஆக்காமல், பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ். காமராஜர் இருந்தால் இந்தி திணிப்பு முடியாது என்று எண்ணி அவரை தேசிய அரசியலுக்கு இழுத்தது காங்கிரஸ். காமராஜர் ஆட்சி பொற்காலம் என்றால், பக்தவச்சலம் ஆட்சி ஒரு இருண்ட காலம். பக்தவச்சலம் ஆட்சியின் மீது இருந்த கோபத்தை மக்கள் காமராஜரை விருதுநகர் ல் தோல்வியடைய செய்தது. இதுவே காமராஜர் அரசியல் வாழ்க்கையின் சுருக்கும். இணையத்தில் உலா வரும் Memes களுக்கு என் பதில்.

*******

"காமராஜரையே தோற்கடித்த மக்கள்."
மன்னிக்கவும். பக்தவச்சலம் ஆட்சியில் காமராஜர் தோல்வியடைந்தார். இத்தனைக்கும் அது அவர் சமூக மக்கள் அதிகம் வாழும் தொகுதி.

"காமராஜருக்கு பிறகு எந்த அணைகளும் கட்ட வில்லை".
நினைத்த இடத்தில எல்லாம் கட்டுவதற்கு அணைகள் ஒன்றும் வீடு இல்லை.

"காமராஜர் ஆட்சி க்கு பின்னர் எந்த தொழிற்சாலைகளும் இங்கு வரவில்லை. திரவிடத்தால் வீழ்ந்தோம்."
பொய். Ford, IT companies, SIPCOT, SEZ திராவிட ஆட்சி காலத்தில் வந்தது. சொல்லப்போனால் காமராஜர் ஆட்சியே திராவிட ஆட்சி தான்.

"மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம்."
அன்று வெற்றி பெற்ற காமராஜர்னாலே மீண்டும் அவர் ஆட்சி அமைக்க முடியவில்லை.

"ஊரு எங்கும் பள்ளிகள் திறந்தார் காமராஜர்."
ராஜாஜி மூடிய பள்ளிகளை மீண்டும் திறந்தார் காமராஜர்.

"காமராஜர் தோல்விக்கு காரணம் திமுக."
இல்லை. அவர் தோல்விக்கு காரணம் காங்கிரஸ். பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்க்கியத்தின் விளைவு தான் காமராஜர் தோல்விக்கு காரணம். எல்லா காங்கிரஸ் தலைவர்கள் போல, அவரும் தேசியமே என்று தமிழகத்தை எதோ ஒன்று கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

*******

Memes போடுவதற்கு முன்னர் வரலாறு முழுவதும் தெரிவது அவசியம்.புத்தகம் படித்தால் முழு வரலாறு தெரியும். Memes படித்தால் அரைவேக்காடா தான் திரியனும்.

இன்று அவர் பிறந்த நாள்.உண்மையான அந்த தலைவரின் வரலாறை போற்றுவோம்.

Remembering one of the Architect of Modern Tamil Nadu Kamaraj.
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. There are around 70 or something dams were built after kamarajar period. Please post it bro.

    ReplyDelete

Item Reviewed: திராவிட தலைவர் காமராஜ் Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran