praveenkumar558@gmail.com
Follow on
Thursday, May 30, 2019

தமிழன் திராவிடனா, இந்துவா?

திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பை குறிக்கும். அந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் திராவிடர்கள். திராவிட குடும்பத்தில் தமிழர்கள் ஒரு அங்கம். அதுமட்டும் இல்லாமல் தமிழர்கள் தான் மூத்த குடி. தமிழ் தான் திராவிட குடும்ப மொழிகளின் முதன்மையானது. அதுவே திராவிட மொழிகளின் தாய் மொழி. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் ஆம்ரம்பம் இப்போது இருக்கும் தமிழ் நாடு கிடையாது என்ற கூற்றும் உண்டு.

திராவிட நிலத்தில் வாழ்கின்றதால் திராவிடன் என்று கூறலாம். ஆனால் தமிழர்களுக்கு தமிழன் என்ற அடையாளம் தவிர வேறு எந்த அடையாளமும் கிடையாது என்பது தான் என் கூற்று. ஏன் என்றால், திராவிட நிலத்தில் வாழும் அனைவரும் தமிழர்கள் கிடையாது. வேற்று மொழி பேசுகின்றவர்களும் திராவிட நாட்டில் வாழ்கின்றனர்.



தமிழர்கள் மதம் பேதம் இன்றி வாழ்ந்து இருக்கின்றார்கள் என்று கீழடி அகழ்வு ஆராய்ச்சி கூறுகின்றது. கீழடி என்பது தமிழ் நாட்டின் பழமையான இடமாக கருதப்படுகின்றது. பழமையான இடத்தில வாழ்ந்த மக்கள் தமிழர்கள். அவர்கள் வாழ்ந்த இடத்தில மதம் தொடர்பாக எந்த ஒரு தகவல்களும் இல்லை. எனவே தமிழன் கண்டிப்பாக ஹிந்து கிடையாது.

அதும் மட்டும் இல்லை, ஹிந்து மதம் என்பது ஆரியர்களால் இந்தியாவிற்கு வந்த ஒன்று என்ற கூற்றும் உண்டு . ஆரியர்கள் என்பவர்கள் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். என்று கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்த மதம் தான் ஹிந்து மதம் என்று கூறுகிறார்கள். நான் கூறும் இந்த கூற்றுகளுக்கு பல ஆதாரங்கள் இணையத்தளத்தில் உள்ளது.

குறிப்பு: நான் ஒரு இந்து தான். உண்மையை உள்ளது உள்ளபடி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று இந்த பதிவை எழுதுகின்றேன்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழன் திராவிடனா, இந்துவா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran