praveenkumar558@gmail.com
Follow on
Monday, November 25, 2019

புத்திசாலியாக மாற தினமும் என்ன செய்ய வேண்டும்?

"புத்திசாலி"

மனிதர்களாக பிறக்கும் அனைவருக்கும் மூன்று முக்கியமான ஆசைகள் எட்டி பார்க்கும்,
  • எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று 
  • எப்போதும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று. 
  • எப்போதும் பணம் அதிகமா இருக்க வேண்டும் என்று 
இவ்வாறு ஒரு முறை கூட சிந்திக்க வில்லை என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. இவ்வாறு சிந்திப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், வேறொரு நபரை மனதில் வைத்து கொண்டு இவைகளை சிந்தித்தால் பெரும் ஆபத்து. 


நேற்றை விட இன்று நீங்கள் புத்திசாலியாக அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியே. மற்றொருவரை விட நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும் அழகாக இருக்க வேண்டும் என்று போட்டி போட்டு கொண்டு இருந்தால், வாழ்க்கையை முழுவதும் அந்த போட்டி தான் இருக்கும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுவது கடினமாக போய்விடும். 

அது மட்டும் இல்லை, புத்திசாலி என்பது ஒரு நிரந்திரமான நிலை கிடையாது. ஒரு நிலையை அடைந்தால், புத்திசாலி என்பது மற்றொரு நிலைக்கு சென்று விடும். அது நிரந்திரம் கிடையாது. ஆனால் அதை நோக்கிய பயணம் வாழ்க்கைக்கு மிக அவசியம். இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த சுவாரசியமும் இருக்காது. புத்திசாலினம் என்பது செயற்கையாக நம் மூளையை மேர்குற்றி கொள்ளுவது தான். மெருகேற்ற வில்லை என்றால், உண்மையான மூளையின் செயல்பாடு வெளிப்படும். 

சரி, எப்போதும் புத்திசாலி என்ற நிலைமையை அடைய வேண்டும் என்றால், கீழ் கூறும் இவைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்,

  • தினமும் குறைந்தது ஒரு பக்கமாவது படிக்க வேண்டும்.
  • தினமும் பத்திரிகை செய்திகளை படித்தல் வேண்டும். 
  • தினமும் ஒரு புதிய வார்த்தையை கற்று கொள்ள வேண்டும்,(எந்த மொழியாலும் சரி தான்).
  • வாழ்க்கைக்கு தேவையான ஒரு புதிதான ஒன்றை தினம் கற்று கொள்ள வேண்டும்.
  • தினம் நல்ல வார்தைகளை காதுகளில் விழவைக்க வேண்டும்.
இந்த ஐந்தையும் தொடர்ந்து, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் செய்தால், கண்டிப்பாக புத்திசாலி என்ற நிலையை தொடர்ந்து நீங்கள் அடைய முடியும். ஒருமுறை அந்த நிலையை அடைந்த பின்னர், இவைகளை நிறுத்திவிட்டால், மீன்றும் முட்டாள் என்ற நிலைக்கு தான் செல்ல வேண்டி இருக்கும். 

சரி, முட்டாளாக இருப்பது பாவமா இல்லை குற்றமா என்றால், சத்தியமாக இல்லை. முட்டாளாக இருப்பது ஒரு வைகையான நிம்மதியும் கூட. ஆனால் அந்த நிம்மதியை வைத்து கொண்டு வாழ்க்கையில் பிழைப்பது கடினம். முடிந்த அளவிற்கு நம்மை மெருகேற்றிக்கொள்வது நல்லது. 

Balancing of 'being an intelligent and idiot' is the real essence of life. 

ஏதேனும் உரையாட விரும்பினால், மின்னஞ்சல் செய்யவும். 

நன்றி !

பிரவீன் குமார் ராஜேந்திரன் 
praveenkumar558@gmail.com
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: புத்திசாலியாக மாற தினமும் என்ன செய்ய வேண்டும்? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran