praveenkumar558@gmail.com
Follow on
Thursday, January 23, 2020

அரசியலுக்கு வாங்க ரஜினி !

திரைப்படங்களில் அனல் பறக்கும் வசனங்கள். நீதி நேர்மை நாணயம் தேசியம் என்று அருமையான கருத்துக்களை கொட்டி தீர்த்தவர் விஜயகாந்த். தனக்கென்று ஒரு ரசிகர் மன்றம். அதற்கென்று ஒரு கொடி என்று அரசியலுக்காகவே பல வருடம் தயார் செய்து ஒரு நாள் தன் பிறந்த மண்ணில் கட்சியை தொடங்கினார் விஜயகாந்த். முழுநேர அரசியல்வாதியாக வளம் வந்தார். மக்களோடு தான் கூட்டணி என்று சொல்லி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து பின்னர் சட்டமன்றத்தில் நாக்ககை துருத்தி தன் கோமாளித்தனத்தின் முதல் அத்தியாயத்தை வெளிப்படுத்தினார். பின்னர் பல கூத்துக்களை அடித்து இன்று கட்சி எங்க இருக்கு னு கேக்குற அளவுக்கும் நல்லா ரேட் க்கு பேரம் பேசுற நிலைமை ல இருக்கு. சும்மா சொல்ல கூடாது விஜயகாந்த் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இளம் வயது முதல் அரசியல் ஆர்வம் என்று அரசியலுக்காகவே பிறந்த நடிகர் என்றளவுக்கு இருந்தார். முழுநேரம் இதே வேலை என்றவுடன் அவரின் முழுநேர நடவடிக்கை மக்களுக்கு தெரிந்து கோமாளி ஆனார். விஜயகாந்த் சுறுசுப்பாக அரசியலில் இருந்த போது தினமும் ஒரு என்டேர்டைன்மெண்ட் கொடுப்பாரு. இப்ப அது மிஸ்ஸிங்.


அந்த இடத்தை நிரப்ப ரஜினிகாந்த் வருகிறார். சென்னையை தாண்டி தமிழ் நாட்டில் எந்த ஒரு இடமும் தெரியாது. அரசியல் தெளிவு கிடையாது. வயதோ 70. படத்தில் தவிர தமிழ் ஒழுங்காக பேச தெரியாது. இனிமேல் தான் கட்சி தொடங்கி தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செஞ்சு. மக்களை சந்தித்து. பேசி. வெற்றி பெற்று முதல்வர் ஆக போறாரு னு ஒரு நண்பர் சொல்லறாரு. நெனச்சாலே பகிர்ன்னு இருக்கு.தல சுத்துது. உங்க தன்னம்பிக்கை பிடிச்சு இருக்கு. பரவா இல்ல, வாங்க ரஜினி. உப்பிட்ட தமிழ் நாடு உங்களை அன்போடு அழைக்கின்றது. நல்லா அரசியல் பழகுவோம். முதலில் உங்க வாடகை பாக்கி ல இருந்து தொடங்குங்க. ஏன் எதற்கு எதனால் னு. ஜாலியா இருக்கும்.

Exciting days are ahead with thalaivar🤩🤩

அரசியலுக்கு வாங்க ரஜினி!

-பிரவீன்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அரசியலுக்கு வாங்க ரஜினி ! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran