praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, April 8, 2020

ஊரடங்கு என்ன ஆகும் ?


ஊரடங்கு என்ன ஆகும் ?

Flattening of New postive cases என்ற நிலையை அடையும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்பது எனது அபிமானம். இப்போது வரைக்கும் நாம் காண்பது ஊரடங்குக்கு முன்னாள் பாதிக்க பட்ட நபர்கள். ஊரடங்கின் எதிரொலியாக Flattening of the curve நிலையை அடைந்து விடலாம் என்று அரசு எண்ணுகின்றது. அது வரை இந்தியா போன்ற பெரிய நாடு தாங்குமா என்பது தான் சந்தேகம். குறைந்தபட்சம் Flattening of the curve என்ற நிலையை நோக்கியாவது செல்ல வேண்டும். அதிகமான பாதிப்புகள் உள்ள ஜெர்மனி அதை நோக்கி செல்வது ஒரு நல்ல செய்தி.
அதை விட  நாம் உற்று நோக்கி படிக்க வேண்டிய நாடு தென் கொரியா தான். மிக தீவிரமான Trace Test Treat என்ற முறையில் சமூக பரவலை ஒரு அளவிற்கு  தடுத்து Flattening of the curve என்ற நிலையை வேகமாக அடைந்துவிட்டது.

இப்போது வரைக்கும் இந்தியா குறைந்த அளவே இதை செய்துள்ளது. இதை அதிகப்படுத்தி Flattening of the curve என்ற நிலையை விரைவாக அடைந்து, ஊரடங்கை மெல்ல மெல்ல தளர்த்த வேண்டும். இல்லை என்றால் நாம் Corona virus விட பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

குறிப்பு: ஏற்கனவே பலரும் கொதிப்பில் உள்ளார்கள். எதுவும் பேசலைனா கூட பரவா இல்ல. கை தட்டு விளக்கு ஏத்து னு மறுபடியும் ஏதாச்சும் சொன்னா பின்னாடி 🔥 அதான் அதிகமாகும். #pkr

பிரவீன் குமார் ராஜேந்திரன்
09/04/2020


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஊரடங்கு என்ன ஆகும் ? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran