praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, May 27, 2020

அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும். ?

தற்போதைய அதிமுக வின் அழிவுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். ஆனால் மூலக்காரணம், பாரதிய ஜனதா கட்சி தான்.

ஆம், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான செல்வாக்கு உண்டு. செல்வாக்கு இல்லை என்றாலும், அவர்களை கேலியாகவும் நகைச்சுவையாகும் பார்க்கும் மாநிலங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று கேரளா. மற்றொன்று தமிழ் நாடு. கேரளாவில் கூட அவர்களுக்கு 1 சட்ட மன்ற உறுப்பினர் உள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் அது கூட இல்லை. இதற்கு முக்கிய காரணம் கேரளாவில் உள்ள RSS கட்டமைப்பு கூட தமிழ் நாட்டில் கிடையாது. இனிமேல் கட்டமைத்து, அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்துவது என்பது முடியாத காரியம். முடியாத காரியம் என்பது மட்டும் இல்லை, நேரம் அதிகம் ஆகும். அதற்கு பதில், அதிமுகவை பயன்படுத்தி கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஜெயலலிதா மரணித்தார்(எவ்வாறு மரணித்தார் என்றார் கேட்காதீர்கள்).மரணித்த அன்றே அதிமுகவும் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்து பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியது. முட்டுக்கட்டையாக இருந்த சசிகலாவை சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து சிறைக்கு அனுப்பியது. இடையூறாக இருந்த தினகரனை கட்சியை விட்டு நீக்கி, எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் மூலமாக கட்சியை தங்கள் வசப்படுத்திவிட்டனர்.


அதிமுகவில் உள்ள எல்லா அமைச்சர்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியும். வருமான வரித்துறை பயத்தை காட்டி, அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பாரதிய ஜனதா கட்சியாக மாற்றி வருகின்றது. அதற்கு அதிமுகவும் இணக்கமாக செயல் படுகின்றது. இவருக்குள் இருக்கும் உடன் பாடு என்னவென்றால், எனக்கு கட்சி உனக்கு ஆட்சி. நான் கட்சியை எடுத்துக்கொள்கிறேன் அதற்கு பதில் நீ பண்ற ஊழலை கண்டு கொள்ள மாட்டேன் என்பது தான் எழுதப்படாத உடன்பாடு. அது படி தான் இதுவரைக்கும் செல்கின்றது.

தேர்தல் நெருக்கிங்க நெருங்க அதிமுக என்னும் கட்சியை பாரதிய ஜனதா கட்சி டம்மி ஆக்கி அவர்களின் ஆதிக்கம் இருக்கும் படி செய்வார்கள்.. பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டியது எல்லாம், வலு இல்லாத அடிமைகள் நிறைந்த அதிமுக தான். அதிமுக வெற்றி பெற்று பலம் அடைந்து விட கூடாது என்பதில் பாரதிய ஜனதா கட்சி கவனமாக இருக்கும்.

அதற்காக எண்ணவேண்டும் என்றாலும் பாரதிய ஜனதா கட்சி செய்யும். வரும் சட்ட மன்ற தேர்தலில், அதிமுகவிற்கு வேறு வழியே கிடையாது. பாரதிய ஜனதா கட்சியுடன் தான் அதிமுக கூட்டணி வைக்க முடியும். வைக்க வேண்டும். அது தான் அவர்களின் தலை விதி. கூட்டணிக்கு மறுத்தால் கட்சியை உடைப்பார்கள்.

பாரதிய ஜனதா கட்சியை கூட்டணி சேர்த்தால் தோல்வி தான் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்களின் சுயநலத்திற்காக கட்சியை காவு கொடுப்பார்கள். பாரதிய ஜனதா கட்சி மிக அதிகமான இடத்தில போட்டியிட்டு அதுவும் தோற்று அதிமுகவையும் தோல்வியடைய செய்யும். அதன் மூலம் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி நிரந்தரமாக கைப்பற்றும். இது தான் என் கணிப்பு. 

அதிமுக என்னும் கட்சி திராவிட கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அது தினகரன் தலைமையில் இருந்தால் மட்டுமே சாத்தியம். தினகரன் மட்டுமே அதிமுகவை அடிமை கட்சியாக வைக்க மாட்டார் என்று ஒரு சிலர் நம்புகின்றார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஜனாதிபதி தேர்தலில் தினகரன் ராம்நாத் கோவிந்த க்கு ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்தார் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். 

எனவே வேறு வழியே கிடையாது. அதிமுக என்னும் கட்சி பாரதிய ஜனதா கட்சியாக மாறுவதை தடுக்கவே முடியாது. பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

நன்றி! 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும். ? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran