praveenkumar558@gmail.com
Follow on
Monday, June 8, 2020

கலைஞர் பிறந்த நாள் அன்று சங்கிகளும் தம்பிகளும்

கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று HBD Father of corruption என்று வாழ்த்துக்கள் சொன்னவர்கள் யார் என்று பார்த்தல், இரண்டே இரண்டு கும்பல் தான்.

  1. தமிழ் நாட்டில் எல்லா விதமான சுகங்களை அனுபவித்து கொழுத்து திரியும் சங்கிகள்.
  2. எந்த ஒரு வரலாறும் தெரியாமல் சீமான் என்னும் புளுகுணி பின்னால் இருக்கும் தம்பிமார்கள்.

நீதி மன்றத்தால் ஊழல் A1 குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாள் போது இந்த இரண்டு கும்பலும் தங்களின் ஆசன வாயை கூட திறக்கவில்லை. மாறாக எந்த ஒரு நீதி மன்றத்தாலும் தண்டிக்கப்படாத கலைஞர் கருணாநிதி அவர்களை இவ்வாறு வாழ்த்துவது, கலைஞர் அசிங்க படுத்த வேண்டும் என்பது தான். கலைஞர் கருணாநிதியின் புகழ் இந்த கும்பல்களின் கீச்சுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. கலைஞர் மட்டும் உயிரோடு இருந்து இருந்தால் இந்த கீச்சுகளை எல்லாம் எல்லி நகையாடி இருப்பார்.


சரி, கலைஞர் அவர்கள் ஊழல் செய்தார் என்றால் அதை நீதி மன்றத்தில் ஏன் வழக்காக தொடரவில்லை. ? ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சாமியை வைத்து கலைஞர் மீது ஒரு வழக்கு தொடர்ந்து, அவருக்கு அவர் வாழும் காலத்தில் தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். ஏன் செய்யவில்லைல்.? அவர் மீது எந்த ஒரு காவல் நிலையத்திலும் கூட இல்லை என்பது தான் உண்மை.

நிரூபிக்க முடியாத அளவிற்கு விஞ்ஞான பூர்வகமா ஊழல் செய்தார் என்று சொல்வது எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் அவர் மீது மீண்டும் மீண்டும் அவரின் புகழை களங்கப்படுத்த பயன்படுத்த படும் யுக்தி என்று தான் கூற வேண்டும். நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா ஈழ தாய் புரட்சி தலைவி..எந்த ஒரு நீதி மன்றத்திலும் தண்டிக்கப்படாத கலைஞரை Father of corruption என்று வாழ்த்துவது அவர்கள் மனதில் இருக்கும் தீராத வன்மம் தான் என்று கூற வேண்டும். அந்த கும்பலுக்கு உண்மையிலே அறிவும் ஆற்றலும் இருந்தால், எதாவது ஒரு ஊழலை நிரூபித்து காட்டலாம். இல்லை என்றால், ஆசன வாயை மூடிக்கொண்டு தமிழ் நாட்டில் வாழலாம்.

குறிப்பு: ஒன்னு மட்டும் நல்லா புரியுது,வாழும் காலத்தில் சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இருக்கின்றார் கலைஞர். அதனால் தான் இன்றும் கதறுகிறார்கள். சீமான் தம்பிகள் எல்லாம் நேற்று பெய்த மலையில் முளைத்த காளான். அவர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.

சூரியனை பார்த்து குறைக்கும் நாய் போல தான் இவர்களும். குறைத்து கொன்டே இருப்பார்கள். கலைஞரின் புகழ் ஓங்கி கொண்டே போகும். கலைஞர் புகழ் வாழ்க. !

நன்றி.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கலைஞர் பிறந்த நாள் அன்று சங்கிகளும் தம்பிகளும் Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran