கேள்வி: சமீப காலமாக இந்தியாவுடன் இஸ்ரேல் ஏன் நெருக்கமாக உள்ளது? இதற்கு பின்னால் உள்ள விஷயம் என்ன? அதுவும் நெதன்யாகு நம் பிரதமர் மோடியிடம் அதிகம் நட்பு பாராட்ட காரணம் என்ன?
பதில்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரேல் சென்ற பொழுது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அவர்கள் உதிர்த்த முத்துக்கள் இவை…அவர் இந்தியா வந்து இருந்த பொழுதும் இதை தான் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அவர்கள் சீனா சென்ற பொழுது உதிர்த்த முத்துக்கள் இவை..
பிரதமர் பெஞ்சமின் கூற்று படி பார்த்தால் இஸ்ரயேலுக்கு, இந்தியாவும் ஒரு பொண்டாட்டி சீனாவும் ஒரு பொண்டாட்டி. அப்படி தானே?. நிற்க.
நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக வருகின்றேன்…
எந்த நாடு எல்லாம் சண்டைக்கு அலைகின்றதோ, எந்த நாடு எல்லாம் பாசிசம் சிந்தனை கொண்ட தலைவர்கள் ஆள்கிறார்களோ, அங்கு எல்லாம் நெருக்கம் காட்டி தங்களின் ஆயுத வியாபாரத்தை செழிப்பாக நடத்தும் நாடு இஸ்ரேல். இதில் ஒரு சூச்சமம் என்னவென்றால், சண்டைக்கு அலையும் பாகிஸ்தான் உடன் நட்பு பாராட்ட முடியாது. நட்பு பாராட்டினால் உள் நாட்டில் பப்பு வேகாது என்பது தான் உண்மை.
குறிப்பு: 2014 ஆண்டு முன்பு வரை இந்தியா பாலஸ்தீனத்துடன் தான் நெருக்கமாக இருந்தது. ஏன் என்றால் பாலஸ்தீனம் தான் உண்மையான நாடு.
சுட்டிகள்:
- "Marriage Made In Heaven", UN Vote Won't Affect Ties: Netanyahu On India
- Israel and China a ‘Marriage Made in Heaven,’ Says Netanyahu
நன்றி!
0 comments:
Post a Comment