praveenkumar558@gmail.com
Follow on
Friday, February 12, 2021

இந்தி நமக்கு ஏன் தேவை இல்லை?

கேள்வி: இந்தி நமக்கு ஏன் தேவை இல்லை?

பதில்:

  1. மராத்திய மொழியில் எடுக்கும் படங்களுக்கு வரி விலக்கு உண்டு என்று மராத்திய அரசு அறிவித்துள்ளது.
  2. பீகாரின் பூர்வகுடி மொழியான மைதிலி போஜ்புரி எங்கு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றது.
  3. ராஜஸ்தான் மக்கள் பேசும் ராஜஸ்தானி ஜெய்புரி மெவாட் அங்கு அரசு மொழி கிடையாது.
  4. தாய்மொழியான ஓடியாவில் பேசுவது அசிங்கம் என்று ஒடிஷாவில் வாழும் ஒரு சில மக்கள் கருதுகிறார்கள்.
  5. பங்களாவை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்று வங்காளிகள் நினைக்கின்றனர்

இவை அனைத்திற்கும் காரணம் இந்தி திணிப்பு தான். இந்த மாநிலங்கள் எல்லாம் ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கவில்லை என்பதினால் வந்த விளைவு தான் இவை. ஹிந்தி நமக்கு தேவை இல்லை என்று கூற கூறமாட்டேன். கட்டாய ஹிந்தி தான் நமக்கு வேண்டாம்.


தேவைக்கு எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவை இருந்தால் ஹிந்தியை படியுங்கள். வலுக்கட்டாயமாக தமிழ் இருக்கும் இடத்தில தமிழுக்கு நிகராக ஹிந்தி வைக்க வேண்டும் என்பது தான் நாம் எதிர்க்க வேண்டும்.

கலைஞர் கருணாநிதி குடும்பம் மட்டும் ஹிந்தி படித்துவிட்டு நம்மை ஹிந்தி படிக்கவில்லை என்று ஒரு கும்பல் திரும்ப திரும்ப கூறுகின்றது. எனக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. டெல்லியில் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு ஹிந்தி தேவை படுகின்றது. எனவே அவர்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் எந்த தவறும் இல்லை. உங்களுக்கும் தேவை இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். யாரும் இங்கே தடுக்கவில்லை. ஹிந்தி படிக்கவில்லை என்பதினால் இங்கு பிச்சை எடுப்பது போல பேசுவது தான் கடுப்பாக உள்ளது.

நன்றி!

பிரவீன் குமார் ராஜேந்திரன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இந்தி நமக்கு ஏன் தேவை இல்லை? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran