praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, February 16, 2021

பழம் நழுவி சாக்கடையில் விழுந்த கதை

2006 சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதி வெற்றி பெற்று இருந்தாலும் தேமுதிக 10 சதவீத வாக்குகள் வாங்கி தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது. அதன் பிறகு நடந்த நாடளுமன்ற தேர்தலிலும் வாக்கு வாங்கி உயர்ந்து, திமுக அதிமுகவிற்கு தலைவலியை கொடுத்தது தேமுதிக. சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து முதல் தவறை செய்தது தேமுதிக. தனித்து நின்று இருந்தாலே அவர் எதிர் கட்சி தலைவர் ஆகி இருப்பார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து, பின்னர் அதே அதிமுக தேமுதிகவை உடைத்து. உடைத்து மட்டும் இல்லாமல் விஜயகாந்த அவர்களை கோமாளி ஆக்கியது.  

2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக ஒரு Game Changer ஆக கருதப்பட்ட தேர்தல். சட்டமன்ற தேர்தலில் கலைஞர் விஜயகாந்தை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக உடன் கூட்டணி வைத்து இருந்தால் இரண்டு கட்சிக்கும் லாபமாக இருந்து இருக்கும். திமுகவும் ஆட்சியை பிடித்து இருக்கும், தேமுதிக உறுப்பினர்களும் சட்டமன்றம் சென்று இருப்பார்கள்.
என்னை கேட்டால் இந்த கூட்டணி அமையாததால் பெருத்த நஷ்டம் தேமுதிக விற்கு தான். ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் இன்றும் பிரதானமான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. கணிசமான சட்டமன்ற உறுபினர்கள் உள்ளார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கும்இருக்கு. தேமுதிகவுக்கு இந்த நிலைமை இல்லை.
இந்த கூட்டணி அமையாததால், அதன் தலைவர் விஜயகாந்த் தோல்வியை சந்தித்த டெபாசிட் இழந்தார். கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. கூட்டணிக்காக அசிங்கமாக, திமுக அதிமுகவிடம் மன்றாட வேண்டிய நிலமையில் உள்ளது. விஜயகாந்தை வைத்து பேரம் பேசிக்கொண்டு திரியும் நிலையில் உள்ளது தேமுதிக. என்னுடைய கணிப்பு படி இந்த தேர்தலோடு சுபம் போட்டு முடிய போகும் முதல் கட்சி தேமுதிக தான்.
10% சதவீத ஒட்டு வாங்கிய கட்சியை காணாமல் போகும் படி செய்ததும் கலைஞர் கருணாநிதியின் ராஜதந்திரம் தான் என்று கருதுகிறேன்.
அந்த சமயத்தில் கலைஞர் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறினார். ஆனால், அந்த பழமோ சாக்கடையில் விழுந்து காணாமல் போனது.
நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பழம் நழுவி சாக்கடையில் விழுந்த கதை Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran