நான் விரும்பிய சினிமா என்ற தலைப்பில் தொடர்ந்து நான் ரசித்த, எனக்கு பிடித்த படங்கள் பற்றி எழுத உள்ளேன். இது என் முதல் பதிவு.
-------------------------------------------------------------------
பருத்திவீரன்.
அமீர் இயக்கத்தில் வந்த இந்த படம் நான் பள்ளி பருவத்தில் பார்த்த படம். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் வந்த கிராமத்து படம். கார்த்திக்கு முதல் படம். சூரியா வின் தம்பி என்பதால் மிகுந்து எதிர்ப்பர்ப்புடன் படத்திற்கு சென்றேன். படத்தின் ஆரம்பமே சிறப்பாக இருந்தது. அப்படியே ஒரு கோவில் திருவிழாவை கண் முன்னே வந்து போகும் அளவிற்கு சிறப்பான பாடல். யுவன் சங்கர் ராஜா இப்படி ஒரு பாடலுக்கு இசை கோர்த்து இருப்பார் என்று இன்று வரை என்னால் நம்ப முடியவில்லை. இரட்டை அர்த்தம் இல்லாத காமெடி, நடிகையின் அளவற்ற காதல், நடிகரின் ரவுடித்தனம் என்று விறு விருப்பாக படம் செல்லும்.

ஊர் ஓரம் புளிய மரம், சரிகம பதனி, அய்யயோ பாடல் எல்லாம் சிறப்பாக இசை அமைத்து இருப்பார் யுவன். இப்ப கேட்டால் கூட சிறப்பாக இதமாக இருக்கும். யுவன் சங்கர் ராஜாவை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்தச் சென்ற படம் என்றால் மிகையாகாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா குரலில் அறியாத வயசு புரியாத மனசு பாடல் இன்று நினைத்தாலும் இளையராஜா குரல் என் காதுகளில் கேட்கின்றது.
ஒட்டு மொத்தப் படத்தில் எனக்குப் பிடித்த காட்சி, கார்த்தியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய ப்ரியா மணியை இயக்குனர் பொன் வண்ணன் அவர்கள் அடிக்கும் காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி. அந்த காட்சி முடிந்த பிறகு ப்ரியா மணி சோறு வைத்து தின்னும் காட்சி எல்லாம் மிக மிக அருமையாக இருக்கும். இந்த ஒரு காட்சி போதும் ப்ரியா மணி க்கு தேசிய விருது கொடுத்தது மிக சரியே என்று தோன்றும். கார்த்திக்கும் இயக்குனருக்கும் தேசிய விருது கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
எல்லாமே நல்லா போய்கிட்டு இருக்கு. அதே மாதிரி தான் படம் முடியும் என்று நினைத்து இருந்தேன். படம் முடிய போகும் தருணத்தில் பலர் திரை அரங்கை விட்டு வெளியே சென்றனர். எனக்கு ஒன்றுமே பிரியவில்லை. படம் இறுதி கட்டத்தை அடைய அடைய மணம் இறுகியது. இந்த படத்திற்கு இப்படி ஒரு கடைசி காட்சியா இருக்கும் என்று நினைத்துக்கொண்டே திரை அரங்கை விட்டு வெளியே சென்றேன்.
ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்னவென்றால் அந்த படம் பார்த்து முடித்த பிறகு அதை பற்றி நினைக்க வைப்பது தான். பருத்திவீரன் படமும் அப்படி தான். படம் முடிந்து கொஞ்ச காலம் வரை அந்த படத்தின் தாக்கம் என்னிடம் இருந்தது. குறிப்பாக அந்த கடைசி காட்சி. படம் பார்த்து முடித்து கிட்ட தட்ட ஒரு மாதம் முத்தழகி நினைவு தான் எனக்கு இருந்தது.
இது போல நல்ல படங்கள் மீண்டும் வரவேண்டும் என்று ஆசை.
நன்றி
பிரவீன் குமார் ராஜேந்திரன்
0 comments:
Post a Comment