praveenkumar558@gmail.com
Follow on
Thursday, March 18, 2021

7 பிறவி உண்டா? - கலைஞர் பார்வையில் திருக்குறள் -1

கேள்வி: திருக்குறளுக்கு விளக்கம் எழுதுபவர்கள் ஏன் மு.வ., சாலமன் பாப்பையா, பரிமேலழகர் போன்றவர்களை மட்டும் குறிப்பிடுகிறார்கள்? கலைஞரின் திருக்குறள் உரை புதிய விளக்கத்துடன் எளிமையாக உள்ளதே? கலைஞர் உரை என்றால் சங்கிகள், தொண்டர்கள் தொடமாட்டார்கள் என்ற பயமா?

பதில்:

அருமையான இந்த கேள்விக்கு ஒரு திருக்குறளை உதாரணமாக காட்டினாள் பொருத்தமாக இருக்கும்,


குறள்:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பரிமேலழகர் உரை:

ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)

மு.வரதராசன் விளக்கம்:

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கலைஞர் உரை

ஒரு தலைமுறையில் கற்ற கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்


இந்த மூன்று உரைகளிலும் உங்களுக்கு வித்யாசம் தெரிகின்றதா?புரிகின்றதா?புரியவில்லை என்றால் நான் விளக்கமாக கூறுகிறேன்.

நீங்கள் கற்கும் கல்வி எந்த ஒரு நிரூபணமும் இல்லாத புராணங்களில் கூறப்பட்டுள்ள 7 பிறவிகள் வரை உதவும் என்று விளக்கவுரையை முவ சாலமன் பாப்பையா பரிமேலழகர் கூறுகிறார்கள். ஆனால், கலைஞர் உரையோ வேறுமாதிரி உள்ளது.

கலைஞர் அவர்கள் ஒரு பகுத்தறிவாதி. பகுத்தறிவு சிந்தனை கொண்ட யாவருக்கும் இந்த பிறவி தவிர வேற எந்த பிறவியின் மீதும் நம்பிக்கை கிடையாது. காரணம், அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நீ கற்கும் கல்வி இல்லாத 7 பிறவிக்கு எல்லாம் உதவாது, ஆனால் நிச்சயமாக வரப்போகும் 7 தலைமுறைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கலைஞர் கூறுகிறார்.

இப்படி ஒருவர் உரை எழுதினால் சங்கிகளுக்கு பிடிக்குமா என்ன?. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத புராணங்களை போற்றும் உரைகள் தான் அவர்களுக்கு பிடிக்கும். கலைஞர் உரை அவர்களுக்கு பிடிக்காது என்பது இயற்கையான ஒன்று தான். பிடித்து இருந்தால் தான் ஆச்சரியம்.

எனக்கு கலைஞர் உரை தான் பிடிக்கும்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 7 பிறவி உண்டா? - கலைஞர் பார்வையில் திருக்குறள் -1 Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran