praveenkumar558@gmail.com
Follow on
Thursday, September 2, 2021

உலகின் தலை சிறந்த பிரதமர் யார்? | Who is the best Prime Minister in the world?

கேள்வி: உலகின் தலை சிறந்த பிரதமர் யார்? ஏன்? எதற்காக அவர் உலகின் தலைசிறந்த பிரதமர் எனப்படுகிறார்?ப

பதில்:

இந்த கேள்வியை படித்த உடன் என் நினைவுக்கு வந்த தலைவர், நவீன சிங்கப்பூரின் தந்தை முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் தான்.

சிங்கப்பூர் என்னும் குட்டி தீவை மக்கள் வாழ தகுதி வாய்ந்த பூமியாக மாற்றியது மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து வியந்து பார்க்கும் ஒரு ஊராக மாற்றிய பெருமை இவரை தான் சேரும்.

வெறுப்பு அரசியல் கிடையாது, மத அரசியல் கிடையாது, ஊழல் கிடையாது என்று ஒரு தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆட்சி செய்தவர் லீ குவான் யூ அவர்கள். தமிழர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்ட ஒரு தலைவர் என்றால் அவர் லீ குவான் யூ தான்.

பலரும் குடும்ப அரசியல் பற்றி குறை கூறுகிறார்கள், ஆனால் பாருங்கள் அவர் மறைந்த பிறகு அவர் மகன் தான் சிங்கப்பூரை ஆட்சி செய்கிறார். தந்தை விட்டு சென்றதை மகன் சிறப்பாக செய்கிறார். தந்தையை போல மகனும் ஒரு நல்லாட்சி செய்கிறார்.

இவர்களை போல ஒரு தலைவன் இந்த உலகில் இனி பிறப்பது அரிது தான்.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: உலகின் தலை சிறந்த பிரதமர் யார்? | Who is the best Prime Minister in the world? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran