praveenkumar558@gmail.com
Follow on
Sunday, September 12, 2021

சென்னையும் நானும்: 95 & 91

சென்னையில் பொது போக்குவரத்து என்பது வெறும் பயணம் செய்யும் முறை மட்டும் இல்லை, அது ஒரு உணர்வு என்று கூறலாம். நான் சென்னையில் இருக்கும் போது, பல இடங்களுக்கு பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துவேன். ட்ராபிக் ஜாம் பற்றி கவலை கிடையாது, வெயில் மழை தொல்லை இருக்காது, ஒரு அளவிற்கு குறைவான செலவு என்று பல்வேறு காரணங்களுக்கு நான் பொது போக்குவரத்தை பயன் படுத்துவேன். 

அவ்வாறு நான் அதிகமாக பயன்படுத்திய பேருந்து என்பது, 95 மற்றும் 91. இதற்கு முன்னால் 95 எனபது 51 ஆக இருந்தது. திருவான்மியூர் இல் இருந்து தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள் தான் இவை. 95 சோழிங்கநல்லூர் வழியாக தம்பரம் செல்லும் மற்றொன்று துரைப்பாக்கம் கட் செய்து தாம்பரம் செல்லும். நான் தாம்பிரம் சனடோரியும் இல் வேலை செய்து கொண்டு இருந்த போது, நான் அதிகமா பயன்படுத்தியது 91. 95 அளவுக்கு 91 கிடையாது. மிக குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கும். எனவே எப்போதும் கூட்டம் இருக்க தான் செய்யும். பஸ் தொடங்கும் இடத்தில் நமக்கு சீட் கிடைத்தால் தான் உண்டு. இல்லை என்றால், கடைசி வரைக்கும் நிற்க தான் வேண்டும். 

91 வை விட 95 அதிகமான சேவை கொண்ட தடம். ஆனாலும், எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 95 கிட்டத்திட்ட பழைய மாமல்லபுரம் சாலையை (ராஜிவ் காந்தி சாலை) முழுவதும் பயணம் செய்யும். வந்தால் தொடர்ச்சியாக மூன்று பேருந்து வரும் இல்லை என்றால் பேருந்தே வராது. தொடர்ச்சியாக மூன்று பேருந்து வரும் போது, பின்னாடி உள்ள பேருந்து நிற்கும் என்று முன்னாடி செல்லும் பேருந்து பஸ் ஸ்டாப் இல் நிற்காமல் செல்வார்கள்.  இப்படியே 3 பேருந்துகளை விட்ட காலம் எல்லாம் உண்டு.

மற்ற பேருந்துகளை விட, இந்த பேருந்துகளில் பெரும்பாலும் நடத்துணர்கள் சில்லறை கேட்டு அடம் பிடிக்க மாட்டார். காரணம் அந்த பேருந்துகளில் அதிகம் பயணம் செய்வது IT ஊழியர்கள் தான். எப்படியும் அவர்களிடம் சில்லறை இருக்காது என்று நினைத்து கொண்டு பல நடத்துனர், அதிகமான சில்லறையை எடுத்து வருவார்கள்.

95 91 சீட்டில் அமர்ந்தபடி விண்ணை முட்டும் IT கம்பனிகளை பார்த்து செல்வதே ஒரு பசுமையான உணர்வு.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும்: 95 & 91 Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran