praveenkumar558@gmail.com
Follow on
Friday, September 17, 2021

சென்னையும் நானும் : வட பழனி சிக்னல் ( Vadapalani Siganal)

 முழு நேரம் சென்னை வாசியாக ஆன பின்பு நான் அதிகமா சென்ற இடம் என்றால் அது வட பழனி சிக்னல் தான். இப்போது தான் அங்கு பாலம் வந்துவிட்டது. நான் சென்னைக்கு வந்த புதிதில் அங்கு பாலம் எல்லாம் இல்லை. நேராக போனால் சித்தி வீடு, இடது புறம் போனால் அலுவலகம், வலது புறம் போனால் ஊருக்கு செல்ல பேருந்து ஏறும் கோயம்பேடு, திரும்பி பார்த்தால் வீடு என்று எனக்கு 4 பக்கமும் வேலை உள்ள இடம் என்றால் அது வட பழனி சிக்னல் தான். 

பாலம் எல்லாம் கெட்டி இப்போது வட பழனி அடையாளம் தெரியாத இடமாக மாறிவிட்டது. எனக்கு இன்னும் நல்லா நியாபகம் உள்ளது, வட பழனி சிக்னலில் பல மணி நேரம் வாகனம் காத்து கொண்டு இருக்கும். எப்ப டா பச்சை விழும் என்று ஏங்கும் அளவிற்கு ட்ராபிக் இருக்கும். ஒன்று மட்டும் நிச்சயமாக இருக்கும், வட பழனி சிக்னலில் தப்பித்தவன் லக்ஷ்மன் ஸ்ருதி சிக்கனில் மாட்டுவான்.

குறிப்பு: இப்போது அங்கு லக்ஷ்மன் ஸ்ருதி இல்லை, ஆனாலும் அது லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னல் தான்..

வட பழனி சிக்னல் எப்போது கூட்டம் இருந்த் கொண்டே தான் இருக்கும். ஒன்று share auto இல்லை என்றால் பேருந்து. இரண்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். மனிதர்கள் மொத்தமும் அங்கு தான் உற்பத்தி ஆவார்கள் போல என்று தோன்றும் அளவிற்கு கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தில் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்து பயணம் செய்த காலம் எல்லாம் ஒரு அற்புதமான மறக்க முடியாத அனுபவங்கள். 

என்ன தான் தினமும் வட பழனிக்கு சென்றாலும், மிக குறைவான முறை தான் முருகன் கோவிலுக்கு சென்று இருப்பேன். தினம் தினம் செல்லும் இடம் என்பதினால் தான் என்னமோ குறைவான முறை கோவில் உள்ளே சென்று உள்ளேன். எனக்கு தெரிந்து குன்று இல்லாமல் முருகன் வாழும் ஒரே இடம் வட பழனியாக தான் இருக்கும். ஒரு வேலை குன்று இருந்து நம்மவர்கள்  பேத்து எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால், குன்று தோறும் குடி இருப்பான் குமரன் என்று தான் படித்த நியாபகம்...

கமலா தியேட்டர் forum மால் AVM சாலிகிராமம் விஜய் வீடு பஸ் ஸ்டாண்ட் 12B பேருந்து  என்று வட பழனியை பற்றி நினைத்த உடன் பல பல விடயங்கள் நினைவுக்கு வருகிறது...

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : வட பழனி சிக்னல் ( Vadapalani Siganal) Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran