praveenkumar558@gmail.com
Follow on
Sunday, September 19, 2021

பேரம் பேசுங்கள்! - All about Bargaining!

கடந்த ஒரு வருடமாக நான் பொருளாதாரம் நிதி மேலாண்மை போன்ற தலைப்புகளில் படித்து கொண்டு இருக்கின்றேன். ஆனந்த் ஸ்ரீனிவாசன், சோம வள்ளியப்பன், ஜெயரஞ்சன், ஷ்யாம் சேகர் என்று பல்வேறு கோணங்களில் படித்து கேட்டு கொண்டு இருக்கிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஒரு தகவலை தருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளாதார சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை ஒரே மொழியில் கூறுவது, சம்பாரித்த பணத்தை எவ்வாறு சேமிக்க செலவு செய்ய வேண்டும் என்பது தான். 

பொருளாதார ஆலோசோகர் சோம வள்ளியப்பன் ஒரு புத்தகத்தில் கூறியிருந்தார், பேரம் பேசுவது நல்லது என்று. அதுவும் போட்டி இருக்கும் போது, பேரம் பேசுவது நல்லது என்று கூறுகிறார்கள்.  அதை நான் சமீபத்தில் பின் பற்றி பயன் அடைந்தேன். 

என் இணையதளத்தின் domain expiry ஆகிவிட்டது. அதை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். Go daddy சரியாக இருக்கும் என்று நினைத்து அவர்களை அணுகினேன். இந்த முறை 10 வருடம் domain வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். Tax உடன் சேர்த்து 6500 என்று கூறினார்கள். ஏதாவது offer உண்டா என்று கேட்டேன், ஒரு offer தந்தார்கள். Tax உடன் சேர்ந்து 5400 என்று கூறினார்கள். கிட்டத்தட்ட 1100 ரூபாய் குறைவு. யோசித்து சொல்கிறேன் என்று கூறி போனை வைத்து விட்டேன். இரவு மீண்டும் phone செய்து ஏதாவது offer உண்டா என்று கேட்டேன். Tax உடன் சேர்ந்து 4500 என்று கூறினார்கள். அதிர்ந்து போனேன். காலையில் 6500. மாலை 5400. இரவு 4500. கிட்டத்திட்ட ஒரே நாளில் 2000 வரை எனக்கு தள்ளுபடி கிடைத்தது. இதற்கு மேல் தள்ளுபடி கிடைக்காது என்று வாங்விட்டேன்.

ஒரு வேலை நான் மட்டும் பேரம் பேசாமல் இருந்து இருந்தால், 2000 ரூபாய் சேமித்து இருக்க முடியாது. இன்னும் காத்து இருந்தால், இதை விட சேமிக்க முடியமா என்று தெரியவில்லை. இன்னும் காத்து இருந்தால் இதை விட குறைவாகவும் கிடைத்து இருக்கும் இல்லை என்றால் எந்த தள்ளுபடியும் கிடையாது என்று 6500 தான் விலை என்று இருந்து இருக்கும்.


பேரம் பேசியதில் ஒரு அளவிற்கு இலாபம் கிடைத்த உடன், அந்த டீலை சட்டென்று முடித்துவிட்டேன். Rich dad poor dad புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது, டீல்கள் குறைந்த காலம் தான் வரும். அதை பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்.

போட்டி இருக்கும் இடத்தில் முடிந்த வரை பேரம் பேசுங்கள். குறிப்பாக சிறு வணிகர்களிடம் வேண்டாம்.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. In the fashionable day, computerized slot machines are totally deterministic and thus outcomes could be typically successfully predicted. In the Eighties in the U.K., machines embodying microprocessors turned common. These used quantity of|numerous|a selection of} options to make sure the payout was controlled within the limits of the gambling legislation. The drums themselves had been pushed by stepper motors, controlled by the processor and with proximity sensors monitoring the position of the drums. A "look-up desk" within the software permits the processor to know what symbols 카지노 사이트 had been being displayed on the drums to the gambler. This allowed the system to regulate the extent of payout by stopping the drums at positions it had decided.

    ReplyDelete

Item Reviewed: பேரம் பேசுங்கள்! - All about Bargaining! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran