praveenkumar558@gmail.com
Follow on
Monday, September 20, 2021

சென்னையும் நானும் : மின்சார ரயில் ( Chennai's Electric Train)

சென்னையில் நான் வசிக்கும் போது அதிகமா பொது போக்குவரத்தை தான் பயன் படுத்தினேன். குறிப்பாக மின்சார ரயில். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் அதிக தூரம் செல்ல ஒரே வழி, மின்சார ரயில் தான். மின்சரா ரயில் என்பது சென்னை மக்களின் மிக நெருக்கமான ஒன்று என்று கூறலாம். ஏன் என்றால், எல்லாரும் அதில் நெருக்கமாக தான் பயணம் செய்வார்கள். 

அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என்று ஒரு பெரும் கூட்டம் பயணம் செய்வார்கள். எனவே தாம்பரத்தில் அல்லது சென்னை கடற்கரை யில் உட்கார இடம் கிடைத்தால் தான் உண்டு, இல்லை என்றால் கடைசி வரைக்கும் நிற்க தான் வேண்டும். 

கிட்டத்தட்ட 10 வருடம் நான் மின்சார ரயிலை பயன் பயன்படுத்தியுள்ளேன். எந்த ஸ்டேஷன் எப்ப வரும் என்று எல்லாம் அத்துபடி. எந்த ஸ்டேஷன் ல எவ்வளவு கூட்டம் ஏறும், எந்த ஸ்டேஷன் இருட்டாக இருக்கும் என்று எப்போதும் எனக்கு நியாபகம் இருக்கும். ஈ காக்கா கூட ஏறாத பழவந்தாங்கள், மொத்த சென்னையும் ஏறும் மாம்பழம் ரயில் நிலையம் என்று பல்வேறு விதமான வழிதடங்களை கடந்து செல்லும் இந்த மின்சார ரயில் ஒரு பிரம்மாண்டமான ஒன்று தான். 


மின்சார ரயிலில் நான் பல்வேறு விதமான மக்களை பார்த்து இருக்கின்றேன். கையில் புத்தகத்தை வைத்து படித்து கொண்டும் வரும் நபர்கள், தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், வியாபாரம் செய்து கொண்டு வரும் வியாபாரிகள், இசையில் மூழ்கி கொண்டு இருக்கும் இளைஞர்கள்(பூகம்பம் வந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்), சத்தமாக பேசி கொண்டு வரும் சிறுவண்டுகள், பாட்டு பாடி உதவி கேட்கும் மாற்று திறன் கொண்டவர்கள், உதவி கேட்கும் திரு நங்கைகள் என்று பல்வேறு விதமான மக்களை பார்த்துள்ளேன். இளம் பெண்களை நான் குறைவாக தான் பார்த்துள்ளேன். ஏன் என்றால், அவர்கள் பெரும்பாலும் பெண்கள் பெட்டியில் தான் பயணம் செய்வார்கள்.

கடந்த 10 வருடங்களில் ஒரு முறை கூட நான் பயணச்சீட்டு எடுக்காமல் நான் பயணம் செய்தது இல்லை. ஏன் என்றால், எந்த ரூபத்தில் எப்ப எங்க டிக்கெட் பரிசோதனை நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், கண்டிப்பாக ஒரு நாள் மாட்டுவர்கள். ஒரே ஒரு முறை மட்டு காலாவதி(expired e-ticket) ஆன பயணசீட்டை வைத்து பயணம் செய்து கிண்டி ரயில் நிலையத்தில் 200 ரூபாய் அபராதம் கட்டினேன். அது ஒரு எதிர் பாராத சம்பவம் என்று கூறலாம். பயணசீட்டு உள்ளது என்ற நம்பிக்கையில் செய்த வினை. அந்த நிகழ்வுக்கு அப்பறம், நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

நான் சென்னையில் இருந்த வரை, குறைவான பயணம் செய்த வழித்தடம் என்றால் வேளச்சேரி கடற்கரை வரை செல்லும் பறக்கும் ரயில் தான். பெரும்பாலும் கூட்டம் இருக்காது. பாதி ரயில் நிலையங்கள் இருட்டாக இருக்கும். இயக்குனர் மிஷ்கின் படம் எடுப்பதற்காக கட்டப்பட்ட ரயில் நிலையங்கள் போல இருக்கும்.

பயணம் செய்ய முடியாமல் போன ஒரே வழித்தடம் என்றால் அது வேளச்சேரி தாம்பரம் வழித்தடம் தான். பல வருடங்களாக அந்த வேலை நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் அந்த வழி தடம் இன்னும் முடியவில்லை. அந்த வழித்தடம் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால், OMR ரோட்டில் இருக்கும் கூட்டத்தை கணிசமாக குறைக்கலாம். எந்த ஆட்சி வந்தாலும், அதற்கு எப்ப ஒரு தீர்வு வரும் என்று தெரியவில்லை. நான் மீண்டும் சென்னை வரும் போது அந்த வழித்தடம் முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : மின்சார ரயில் ( Chennai's Electric Train) Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran