praveenkumar558@gmail.com
Follow on
Thursday, September 9, 2021

சென்னையும் நானும் : ஆந்திரா மெஸ் ( Andhra mess in Chennai)

 சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நான் சென்னையில் இருந்துள்ளேன். கோடம்பாக்கம் திருவான்மயூர் சோழிங்கநல்லூர் கிரோம்பேட்டை துரைப்பாக்கம் போன்ற பல பகுதிகளில் வசித்து இருக்கின்றேன். இந்த பகுதிகள் எல்லாம், சென்னையில் ஒவ்வொரு மூலையில் உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு இடமும் வித்தியாசமாக இருக்கும். கோடம்பாக்கத்தில் அதிகமான சினிமா தொழிலார்கள் வாழ்வார்கள், திருவான்மியூரில் அதிகமான இளைஞர்கள் வாழ்வார்கள். 

இப்படி என்ன தான் பல வித்யாசங்கள் இருந்தாலும், இந்த எல்லா பகுதிகளில் பொதுவாக ஒன்று இருக்கும். அது தான் ஆந்திரா மெஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்கள், சென்னையில் உள்ள எல்லா பகுதிகளில் மெஸ் வைத்து நடத்துகிறார்கள்.

பொதுவாக இந்த ஆந்திரா மெஸ்களின் சிறப்பு என்னவென்றால், அளவில்லதா சாப்பாடு, பப்பு, பொடி, துவையல், மோர் குழம்பு, ரசம், தயிர், கோங்குரா துவையல்... என்று மெனுவே மாசக இருக்கும்.

நான் வாழ்ந்த பகுதிகளில் மட்டும் இல்லை, சென்னையில் உள்ள எல்லா பகுதிகளிலும் ஏதாவது ஒரு ஆந்திரா மெஸ் இருக்கும். பல பல bachelor களின் பசியை போக்கிய பெருமை ஆந்திரா மெஸ்களுக்கு தான் சேரும். எத்தனை முறை சாப்பாடு கேட்டாலும் சலிக்காமல் தருவார்கள். இப்படிபட்ட ஆந்திரா மெஸ்கள் மட்டும் சென்னையில் இல்லை என்றால், பல bachelorகளுக்கு நல்ல உணவு கிடைத்து இருக்காது.

சென்னை மக்களுக்கு பரந்த மனதுடன் உணவளிக்கும் ஆந்திரா மெஸ்களுக்கு இந்த சென்னை தினம் அன்று என் நன்றிகள். எனக்கு பிடித்த ஆந்திரா மெஸ், கோடம்பாக்கத்தில்  உள்ள ஸ்ரீ சபரி ஆந்திரா மெஸ் மற்றும் T நகரில் உள்ள கனகதுர்கா மெஸ்.   

சுமார் 3 வருடங்கள் நான் கோடம்பாக்கம் சபரி ஆந்திரா மெஸ் இல் உண்டுள்ளேன். 5 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு ஒரு நாள், அங்கு சென்று இருந்தேன். எல்லாமே மாற்றம். வேலை செய்யும் நபர்கள் தொடங்கி முதலாளி வரை எல்லாமே மாற்றம் தான். பழைய முதலாளி கடையை விற்று விட்டு சொந்த ஊர் சென்று 3 வருடங்கள் ஆகின்றது என்று புது முதலாளி கூறினார். நம்மை போல பிழைக்க சென்னை வந்த அவர்கள், பிழைப்பு முடிந்து ஊருக்கு சென்றுவிட்டார்கள் போல என்று நினைத்து கொண்டு என் பழைய நினைவுகளை  பப்பு பொடி உடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தேன். 


So, What is your favourite Andhra Mess?


- பிரவீன் குமார் ராஜேந்திரன்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : ஆந்திரா மெஸ் ( Andhra mess in Chennai) Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran