praveenkumar558@gmail.com
Follow on
Friday, September 10, 2021

சென்னையும் நானும் : திருவான்மியூர் நினைவுகள் (Thiruvamaiyur Diary)

முன்பு ஒரு காலத்தில் சென்னை திருவல்லிக்கேணி தான் bachelorகளின் சொர்க்கம் என்று கூறுவார்கள். பின்பு அதை திருவான்மியூர் கைப்பற்றி விட்டது. சென்னைக்கு வெளி ஊரில் இருந்து வரும் நபர்களில் முக்கால் வாசி பேர், IT துறையில் வேலை செய்வதற்காக தான். IT கம்பனிகள் அருகில் இருப்பதினால், திருவான்மியூர் தான் bachelorகளின் முதல் தேர்வாக இருக்கும்.

எட்டி பார்த்தால் கடல், தெரு எங்கும் கை ஏந்தி பவன்கள், தல அஜித் வீடு, பார், பப் என்று ஒரு bachelor க்கு தேவையான அனைத்தும் இருக்கும் ஒரே இடம் திருவான்மியூர். 

எனக்கு நல்லா நியாபகம் உள்ளது, தினம் காலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு பெரிய பட்டாலத்துடன் நடைப்பயிற்சி செய்வார். அரசியல் சினிமா என்று ஊருக்கே கேட்கும்படி பேசிக்கொண்டு செல்வார்.

காலையில் பயில்வான் ரங்கநாதன் என்றால், இரவில் தினம் தினம் வரும் கேரக்டர் தான் மோர் தாத்தா. மோர் தாத்தா விடம் மோர் வாங்கி குடிக்காமல் யாராவது இருப்பார்களா என்று தான் கேட்க தோன்றும். பூந்தி போட்டு அவர் கொடுக்கும் அந்த மோர் குடிக்க ஒரு பெரிய கும்பல் உண்டு. தாத்தா எங்கு இருக்கிறார் என்று கேட்டு, அங்கு சென்று மோர் குடித்த காலம் எல்லாம் உண்டு. கூகிளில் மோர் தாத்தா வீடு என்று தேடி சென்று மோர் குடித்த காலம் எல்லாம் உண்டு. அது எல்லாம் ஒரு காலம்... 

சுமார் இரண்டு வருடங்கள் நான் திருவான்மியூரில் இருந்த்துள்ளேன். ஒரே பதிவில் முடிக்க முடியாது...அடுத்த பதிவில் திருவான்மியூர் நினைவுகள் தொடரும்...


நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : திருவான்மியூர் நினைவுகள் (Thiruvamaiyur Diary) Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran