praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, September 21, 2021

சென்னையும் நானும் - பிராட்வே.

 சென்னையில் பல ஆண்டுகள் வாழும் மக்களிடம் ஒரு சிறப்பு என்றால், எந்த பஸ் எங்க போகும் என்பதை சரியாக கூறுவார்கள். எல்லா பேருந்தும் நாம் நினைக்கும் வழியில் செல்லாது. ஒரே இடத்திற்கு பல வழிகளில் பஸ் போகும். சரியான பேருந்தில் நாம் ஏறவில்லை என்றால், அதிகமான தூரம் நடக்க வேண்டி இருக்கும் அல்லது தேவை இல்லாத இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும். இப்போது எல்லாம் எந்த பேருந்து எந்த வழியாக செல்லும் என்பதை கூகிளில் தேடினால் வந்து விடும். 2012 ஆம் ஆண்டுகளில் எல்லாம் இந்த வசதி இருந்த மாதிரி நியாபகம் இல்லை. ஒரு வேளை இருந்து இருந்தாலும், நான் அதை பயன்படுத்தியதில்லை. பெரும்பாலும் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் நபர்களிடம் தான் கேட்பேன். 

ஆரம்ப காலத்தில் அலுவலகம் செல்ல பேருந்தை தான் பயன்படுத்தினேன். வரிசையாக பேருந்துகள் வரும், ஆனாலும் நாம் நினைக்கும் பேருந்து வராது. அப்படி வரிசையாக வரும் பேருந்துகளை கவனிப்பேன். எந்த பேருந்து எங்கும் செல்லும் என்பதை கவனிப்பேன். நான் பார்த்த பேருந்துகளில், அதிகமான பேருந்து பிராட்வே என்று இருந்தது. 

6-7 வயது இருக்கும் போது நான் பராட்வே சென்றுள்ளேன். இப்ப அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருந்தது.  எனவே ஒரு மாலை பொழுதில் பிராட்வே பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். எந்த ஒரு காரணமும் இன்றி, சுற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக நான் பிராட்வே சென்றேன்.  ஒரு காலத்தில் இது தான் வெளியூர் செல்லும் பேருந்து நிலையாமக இருந்தது என்று நண்பர் ஒருவர் கூறினார்.

நான் அங்கு செல்லும் போது இரவு 8 மணி. சென்னையில் நான் அதற்கு முன்னால் பார்த்த இடங்களில் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. ரோடுகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். அதிகமான மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. நான் பார்த்த மக்கள் பெரும்பாலும் சென்னையின் பூர்வகுடி மக்கள் என்று தோன்றியது. அசல் சென்னை தமிழை நான் நீண்ட இடைவேளைக்கு பிறகு கேட்ட இடம் என்றால், அது பிராட்வே தான். வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள் தான் என் கண்களில் அதிகம் தென்பட்டார்கள். பெரும்பாலும் விலும்பு நிலை மக்கள் தான் அங்கு அதிகம் இருந்தார்கள். அருகில் தான் ராயபுரம். அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. நேரம் 9 ஆகிவிட்டதால், மீண்டும் பேருந்து ஏறி வீட்டிற்கு சென்று விட்டேன்.

வீட்டிற்கு செல்லும் போது மணி 10. எங்கு சென்றேன் என்று கேட்டார்கள், பிராட்வே சுற்றி பார்க்க என்று புன்னகையுடன் கூறுனேன். பிராட்வே பார்த்த பிறகு, வட சென்னையில் உள்ள மற்ற இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இந்த மாதிரி நான் சென்று பார்த்த ஒவ்வொரு இடங்கள் பற்றி பின் நாட்களில் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் - பிராட்வே. Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran