praveenkumar558@gmail.com
Follow on
Saturday, September 25, 2021

சென்னையும் நானும் : DLF Days

மற்ற நகரங்கள் போல தான் சென்னையும் இருந்தது. 1996 ஆம் ஆண்டுற்கு பிறகு தான் சென்னை ஒரு பெரு நகரமாக உருவெடுத்தது. Tidel பார்க்கின் வருகை சென்னையை வேறு ஒரு நகரமாக மாற்றியது. சென்னையை நோக்கி பல நகரங்களில் இருந்து மக்கள் படையேடுக்க தொடங்கினார்கள்.

அவ்வாறு சென்னையை நோக்கி வந்தவர்களில் நானும் ஒருவன். படித்து முடித்து வேலை தேடி கொண்டு இருந்த காலம் அது. வாரம் வாரம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் நேர்காணலுக்கு சென்று விடுவேன். அவ்வாறு நான் சென்ற இடம் தான் DLF. அந்த நேரத்தில் என்னிடம் வண்டி கிடையாது. DLF வாசில் இருந்து நான் நடந்து தான் உள்ளே செல்ல வேண்டும். முகப்பே மிக பிரமாண்டமாக இருந்தது. வெளியில் இருந்து பார்த்த போது IBM மற்றும் Sutherland பெரியர்கள் தெரிந்தது. என்னை போலவே பலரும் இன்டெர்வியூ க்கு வந்து இருந்தனர். எத்தனை பேர் என்னுடன் சேர்ந்து வேலை தேடி கொண்டு இருந்தார்கள் என்று அன்று தான் தெரிந்து. முகப்பில் இருக்கும் அலுவலகம் கேட் பாஸ் தந்தார்கள். வேகமா உள்ளே நடந்தேன். உள்ளே நடக்க நடக்க என் கண்கள் கொள்ளாத அளவிற்கு வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள். ஏதோ ஒரு ஷங்கர் படம் போல இருந்தது. கட்டிடங்களும் அங்கு நடந்து சென்ற software engineer களை பார்க்கும் போது நாமும் இங்கு வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கு மட்டும் இல்லை, யாராக இருந்தாலும் தோன்றும். அந்த அளவுக்கு பிரமாண்டம்.

நான் நேர்காணல் எடுக்க வேண்டிய அலுவலகம் வந்தது. அங்கு நான் மட்டும் தான் இருந்தேன். ஜில் என்று AC. வெயிலில் நடந்து சென்றதால் இதமாக இருந்தது. முதல் ரவுண்டு முடித்துவிட்டேன். இரண்டாவது ரவுண்டுற்கு ஒரு அறையில் காத்து கொண்டு இருந்தேன். இரண்டு நபர்கள் வந்து என்னை நேர்காணல் செய்தார்கள். ஒரு fresher என்று கூட பார்க்காமல் சர மாறியாக என்னை கேள்வி கேட்டார்கள். நமக்கு இந்த வேலை கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டேன். பெரும் சோகத்துடன் மீண்டும் நடந்து சென்றேன். இங்கு நமக்கு வேலை கிடைக்க வில்லை என்ற தவிப்புடன் நடந்து சென்றேன். கண்டிப்பாக ஒரு நாள் நான் இங்கு வருவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.

ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் அதே DLF இல் வேலைக்கு சென்றேன். எங்கு எனக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டதோ, அதை இடத்திற்கு வேலைக்கு சென்றேன். முதல் நாள் அன்று நான் DLF வெளியே எடுத்து படம் தான் இது.


என்னை நிராகரித்த இடம் என்பதினால் தான் என்னவோ, அங்கு நான் பல இரவுகள் தங்கி இருந்து இருக்கின்றேன். DLF விற்கு என் மனதில் எப்போதும் ஒரு நீங்காத இடம் உண்டு.

மற்றொரு பதிவில் DLF நாட்கள் பற்றி விரிவாக எழுதுகிறேன்..
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : DLF Days Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran