praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, September 29, 2021

சென்னையும் நானும் : Meet with Actor Prakash Raj

என் முதல் இரண்டு வருடங்கள் எல்லாமே சென்னையின் மைய பகுதியான கோடம்பாக்கம் தான். நான் என் அண்ணன் உடன் தங்கி இருந்தேன். அண்ணன் மற்றும் அனைவரும் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள். எனவே திரை நட்சத்திரங்களை சந்திப்பது எல்லாம் பெரிய விடயம் கிடையாது. 

அண்ணன் அப்போது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்சியில் வேலை செய்து கொண்டு இருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் தான் நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருந்தார். பல நாட்கள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த நாளும் வந்தது.

அண்ணன் என்னை AVM ஸ்டுடியோ விற்கு வர சொல்லி இருந்தார். பகல் ஒரு மணி போல AVM ஸ்டூடியோ சென்று இருந்தேன். சென்ற உடனே மதிய உணவு வழங்கினார்கள். என்னை பற்றிய குறிப்புகளை எடுத்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்து சென்றேன். நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் தயார் ஆகி கொண்டு இருந்தார். அவரின் வருகைக்காக எல்லாரும் எதிர் பார்த்து கொண்டு இருந்தார்கள். இந்திய அளவில் பிரபலமான பிரகாஷ் ராஜ் அவர்கள் சட்டென்று வந்து நின்றார். முகத்தில் புன்னகை மிடுக்கான உடை என்று கம்பீரமாக வந்து நின்றார். அவர் நடை உடையில் கம்பீரம் அதிகமாக இருந்தது. கில்லி படத்தில் நடித்த வில்லன், மொழி படத்தில் நடக்த குணச்சித்திர நடிகர் என எல்லாமும் ஆகிய பிரகாஷ் ராஜ் என் கண் முன்னாடி வந்து நின்றது இன்றும் நினைவில் உள்ளது

மிடுக்கான உடையில் கம்பீரமாக தனது நிகழ்ச்சியை தொடங்கினார். மிக சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தார். அண்ணன் ஒரு photo எடுக்க வேண்டும் என்று அருகில் சென்று கேட்டார். உடனே சரி என்று கூறினார். அண்ணன் என்னை கூப்பிட்டார். அருகில் சென்றேன். அண்ணனும் அருகில் வந்து நிற்க கூறினார். சட்டென்று ஒரு கிளிக்கயை கிளிக்கினார் photographer. அது தான் இந்த புகைப்படம்.

இந்த நிகழ்ச்சி நடந்தது கொண்டு இருந்த நேரத்தில் அவர் பெரிய அளவில் அரசியல் பேசியதில்லை. அந்த நேரத்தில் வெறும் நடிகாரக தான் அவரை எனக்கு பிடிக்கும். நிகழ்ச்சி முடிந்து 6 வருடம் பிறகு அவரின் அரசியல் நிலைப்பாடு அவரை ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதராக பிடிக்க தொடங்கியது...

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : Meet with Actor Prakash Raj Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran