praveenkumar558@gmail.com
Follow on
Saturday, October 2, 2021

சென்னையும் நானும் : Car license வாங்கிய படலம்.

ஏதாவது ஒன்றரை அடைய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அதை ஒரு வெறி கொண்டு நிறைவேற்றுவேன். அப்படி ஒன்று தான் கார் license வாங்க வேண்டும் என்ற ஒன்று. முறையாக ஒரு டிரைவிங் ஸ்கூல் சேர்ந்து படித்து license வாங்க வேண்டும் என்ற ஒரு வெறி எனக்கு வந்த வருடம் 2014.

அப்போது நான் கோடம்பாக்கதில் இருந்த நேரம். என் வீடு அருகில் இருந்த சிவா டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்தேன். முதலில் ஒரு LLR போட வேண்டும் அப்பறம் 1 மாதம் பயிற்சி க்கு பிறகு license வாங்கிவிடலாம் என்று கூறினார் ஓனர் சிவா. பணத்தை கட்டினேன். ஒரு நாளும் தவற விடாமல் பயிற்சி எடுத்தேன். எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது. கண்டிப்பாக நாம் license வாங்கி விடலாம் என்று.

 License வாங்க போகும் அந்த நாளும் வந்தது. காலை சீக்கிரமாக சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் வர வேண்டும் என்று கூறினார்கள். நானும் சீக்கிரம் எழுந்து சென்றேன். டிரைவிங் ஸ்கூல் ஓனர் சிவா அவர்களும் அங்கே வந்து இருந்தார். டிரைவிங் டெஸ்ட் எடுக்க நேரம் ஆகும் என்றார். சீக்கிரம் வர சொல்லி இருந்ததால் சாப்பிடாமல் சென்று இருந்தேன். அருகில் உள்ள ஒரு கடையில் சென்று உண்டேன். இன்னும் எனக்கு நினைவு உள்ளது, நான் அன்று உண்டது 2 பூரி ஒரு வடை. என் வாழ் நாளில் மறக்க முடியாத உணவு அது. ஏன் என்றால், அந்த 2 பூரி ஒரு வடை தின்ற ஒரு அரை மணி நேரம் பிறகு வயிற்றில் கட முட என்ற சத்தம் கேட்க தொடங்கியது. இன்னும் 5 நிமிடங்களில் டிரைவிங் டெஸ்ட் தொடங்கும் என்று சிவா கூறினார். எனக்கோ வயிறு கட முட முட என்று சத்தம் அதிகமாகி கொண்டே இருந்தது. பாத்ரூம் வரவா வேண்டாமா என்ற நிலை.

Students யாரும் இங்க இருக்கீங்களா என்று RTO கேட்டார். நானும் இன்னும் சிலரும் கையை தூக்கினாம். தனியாக வர கூறினார். நான் தான் மூன்றாவது நபர். எனக்கு முன் நின்ற இரண்டு நபர்களுக்கும் என்ன நடக்கின்றது என்று பாத்து கொண்டு இருந்தேன். கட முட சத்தம் மட்டும் ஓயவில்லை.

 என்னுடைய வாய்ப்பு வந்தது. 

"வந்து வண்டிய எடுங்க" என்று RTO கூறினார்.

"எந்த காலேலேஜ் என்ன படிக்கிறீங்க நீங்க"

"சத்யபாமா ME சார்"

"BE படிக்கிறதே கஷ்டம், இதுல ME படிக்குறீங்க"

"ஆமாம் சார்"

"வண்டிய மெல்ல எடுங்க..கொஞ்ச தூரம் first gear.. அப்பறம் 2nd gear ல ஒட்டனும்..வண்டி நான் சொல்லாம நிக்க கூடாது...வண்டி ஆப் ஆக கூடாது...சரியா...வண்டி எடுங்க"

"சரி சார்"

மெல்ல வண்டியை எடுத்தேன். எனக்கு இந்த first கியர் கிலட்ச விடுவதில் கொஞ்சம் பிரச்சனை உண்டு. எல்லாரும் போல ஆப் செய்து விடுவேன். பயந்து கொண்டு வண்டியை எடுத்தேன். 

"மூஞ்சி ல ஒரு பயம் தெரியுது. எந்த பயமும் வேண்டாம். வண்டிய எடுங்க"

"வயிறு சரி இல்ல சார்"

"ஓ..அப்படியா..வேற ஒரு நாள் கூட வாங்க"

"இல்ல சார். போலாம்"

என்று கூறி வண்டியை எடுத்தேன். அன்று கிலட்ச் எனக்கு சாதகமாக இருந்தது. மெதுவாக எடுத்து பின்னர் இரண்டாவது கியரில் ஒட்டி முடித்தேன். 

"அப்படியே ரிவர்ஸ் எடுங்க..வண்டி ஆப் ஆக கூடாது"

"சரி சார்"

மெதுவாக வண்டியை ரிவர்ஸ் எடுத்தேன். ரிவர்ஸ் எல்லாம் எடுக்க சொல்லுவார்கள் என்று சிவா சொல்லே இல்லை. எப்படியோ வண்டியை ஆப் ஆகாமல் ரிவர்ஸ் எடுத்து விட்டேன்.

"போதும் வண்டியை மெல்ல நிறுத்துங்க"

"சரி சார்".

வண்டியை மெல்ல நிறுத்தினேன். 

"ஆபீஸ் உள்ள பாத்ரூம் இருக்கு. போகணும் னா அங்க போகங்க"

"சரிங்க சார். THANK YOU SO MUCH".

இரவு வந்து LICENSE வாங்கி கொள்ளலாம் என்று சிவா கூறினார்.

"LICENSE வாங்கி கொடுத்துக்கு ரெம்ப நன்றி சார்."

"பரவா இல்ல இருக்கட்டும். வேற யாருக்கும் வேணும்னா எங்க கிட்ட வர சொல்லுங்க. செஞ்சு கொடுக்கலாம்."

"சரிங்க சார். கண்டிப்பா"

License வாங்கி சுமார் 5 வருடங்கள் ஆகிவிட்டது. படித்தது மறந்து விட்டது. அந்த வெறி ஓடிவிட்டது. மீண்டும் அது எப்போது வரும்..வந்து எப்போது நான் கார் வாங்குவேன் என்று எல்லாரும் காத்து கொண்டு இருகிறார்கள். நான் உட்பட...

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : Car license வாங்கிய படலம். Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran