praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, October 19, 2021

சென்னையும் நானும் - Anna Centenary Library

சென்னையில் நீ எந்த இடத்திற்கு அதிகமாக சென்று உள்ளீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் உடனே கூறும் பதில் அண்ணா நூற்றாண்டு நூலகம். சென்னை கோட்டூர்புரம் இல் இருக்கும் இந்த பிரமாண்டமான நூலகம், சென்னைக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம். நட மாடும் நூலகம் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கட்டிய இந்த நூலகம் ஒரு அதிசயம் என்றால் மிகையாகாது.

 காலை உணவை முடித்துவிட்டு நேராக அண்ணா நூலகம் சென்று விடுவேன். கீழ் தளத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். நான் பெரும்பாலும் வரலாறு சம்மந்தமான பகுதிக்கு தான் பெரும்பாலும் செல்வேன். நூலகம் சென்று படிப்பதில் ஒரு நன்மை என்றால், அது பல ஆசிரியர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கும். அண்ணா நூலகம் எனக்கு அறிமுக படுத்திய ஆசிரியர்கள்

1. தொ. பரமசிவம்

2. சு. வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்)

3. சுந்தர ராமசாமி.

 அது மட்டும் இல்லாமல், படிப்பதற்கு ஒரு அமைதியான சூழ்நிலையை நூலகங்கள் கொடுக்கும். அண்ணா நூற்றாண்டு நூலகம் அதற்கு விதி விலக்கு அல்ல. மிக மிக அமைதியாக இருக்கும். மூச்சு சத்தம் கூட கேட்காது. AC உண்டு என்பதால், தூக்கம் வருவது போல இருக்கும். எப்போது எல்லாம் தூக்கம் வருவது போல உள்ளதோ, அப்போது எல்லாம் கீழே சென்று டீ குடிப்பேன். பெரும்பாலும் மதிய உணவு சாப்பிடாமல் நாள் முழுவது நான் அங்கு உட்கார்ந்து படிப்பேன். தீவிர வாசிப்பில் நேரம் போவது தெரியாது என்பார்கள். அது எனக்கும் பொருந்தும். காலை 11 மணிக்கு ஆரமிக்கும் என் வாசிப்பு மாலை 6 மணி வரைக்கும் தொடரும்.

 சென்னையை விட்டு நான் வந்த பிறகு, நான் அதிகமாக தேடுவது அண்ணா நூலகம் தான். அந்த நூலகத்தை பார்க்கும் போதும் எல்லாம், இப்படி ஒரு நூலகம் நம்ம ஊரில் இல்லையே என்று தோன்றும். கலைஞர் சென்னையில் நூலகம் கட்டினார், அவர் மகன் ஸ்டாலின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் கட்டப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அளவற்ற மகிழ்ச்சி. கலைஞர் நூலகம் எப்போது காண்பேன் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. 

Miss you anna centenary library, Welcome Kalaignar library.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் - Anna Centenary Library Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran