praveenkumar558@gmail.com
Follow on
Saturday, October 16, 2021

பொன் விழா காணும் அதிமுக!

 பொன் விழா காணும் அதிமுக!

எம்ஜியார் கட்சி ஆரமித்தது ஆட்சி செய்தது என்று எல்லாம் நான் படித்து தெரிந்து கொண்டது மட்டும் தான். அவர் ஆட்சி செய்த காலத்தில் பிறக்கவே இல்லை. நான் படித்து தெரிந்து கொண்டதில், எம்ஜியார் தனது திரை பிம்பத்தை வைத்து தேர்ததில் வெற்றி பெற்றவர். மற்றபடி MGR ஒரு அழகான எடப்பாடி பழனிச்சாமி தான். 

அவருக்கு பின்னர் வந்த ஜெ., ஒரு வித்தியாசமான தலைவராக உருவாகினார். MGR அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும், ஜெ. ஒரு தைரியமாக செயல் பட்ட தலைவர். இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமர் என்று கருதப்பட்ட வாஜ்பாய் அவர்களின் குடுமியை பிடித்து ஆட்டியவர் ஜெ. MGR போல மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லாமல், மத்திய அரசை மிரள வைத்தவர் ஜெ. 

ஜெ. வந்த பிறகு தான் அதிமுக அசுர வளர்ச்சி பெற்று இந்தியா வின் மூன்றாவது பெரிய கட்சி ஆனது. ஜெ. அதிமுகவை ஒரு இரும்பு கோட்டையாக மாற்றினார். என்ன தான் MGR கட்சி ஆரமித்து இருந்தாலும், ஜெ. தான் அந்த கட்சி க்கு உண்மையான பலம். MGR ஆரமித்த கட்சியை ஜெ. கட்சியாக மாற்றினார்.

ஜெ. விற்கு பிறகு அதிமுக மீண்டும் MGR கட்சியாக மாறிவிட்டது. MGR யை விட ஒரு சிறந்த அடிமையா எடப்பாடி பழனிச்சாமி OPS செயல் படுகின்றனர். ஆட்சியை பறிகொடுத்தும், அடிமையாக இருக்கின்றனர். அன்று MGR காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக இருந்தார் இன்று EPS OPS பாஜகவிற்கு அடிமையாக உள்ளனர். அவ்வளவு தான் வித்தியாசம்.

நாடாளுமன்ற தேர்ததில் தோல்வி, சட்டமன்ற தேர்ததில் தோல்வி, உள்ளாட்சி தேர்ததில் தோல்வி என்று தொடர் தோல்வி முகம் தான் அதிமுகவிற்கு. ஒரு கட்சி பொன் விழா ஆண்டில் இவ்வளவு மோசமாக இருக்க கூடாது. அதிமுக விற்கு தேவை, ஜெ. போன்ற ஒரு தலைமை, MGR போன்ற ஒரு தலைமை அல்ல. ஜெ. போல ஒரு தலைமை மீண்டும் அமைவது சிரமம். தனக்கு பிறகு இந்த கட்சி ஒன்னும் இல்லாமல் போகட்டும் என்று தான் யாரையும் அடுத்த தலைவராக ஜெ. அடையாளம் காட்டவில்லை. தனக்கு பிறகு இந்த கட்சி இருக்காது என்று அவருக்கு தெரியும், அதே போல நடைபெறுகின்றது.

MGR,ஜெ. விற்காக கட்சியில் சேர்ந்து இன்று நடுத்தெருவில் நிற்கும் ரத்தத்தின்  ரத்தங்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்.

புதிதாக உருவாக்க மட்டும் இல்லை, இருப்பதை காத்து கொள்ள புத்தி வேண்டும். காலம் முழுவதும் அடிமையாக இருந்துவிட்டு, இவனுங்களுக்கு பொன் விழா ஒரு கேடு. இந்த பொன் விழாவில் இவனுங்க பொசுங்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பொன் விழா காணும் அதிமுக! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran