praveenkumar558@gmail.com
Follow on
Saturday, October 16, 2021

சென்னையும் நானும் : கிண்டி காபி கடை

சென்னையில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் இருந்துள்ளேன். அந்த 10 வருடத்தில் பல்வேறு விதமான மனிதர்களை சந்தித்து உள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை எனக்கு கொடுத்து சென்று உள்ளார்கள். ஒரு சிலர் என்னை மகிழ்வித்துள்ளார்கள், ஒரு சிலர் என்னை வருத்தம் அடைய செய்து உள்ளார்கள், ஒரு சிலர் என்னை சிரிக்க வைத்து உள்ளார்கள். கிட்டத்திட்ட மனிதர்களும் ஒரு அறுசுவை உணவு போல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு சுவை பற்றியும் வரும் பதிவுகளில் நான் எழுதலாம் என்று நினைத்து உள்ளேன். இந்த பதிவில் என்னை சிரிக்க வைத்த கார்த்திக் என்னும் நபரை பற்றி பார்க்கலாம்.

 நண்பர் ஜானி அண்ணன் ஒரு நாள் எனக்கு ஒரு கால் செய்து இருந்தார். அவர் நண்பர் ஒருவர் நல்ல தொழில் ஒன்று உள்ளது, மார்கெட்டிங்க கிடையாது, முதலீடு தேவை இல்லை, நல்ல வருமானம் வரும் என்று கூறியதாக ஜானி கூறினார்.  நல்லா விசாரித்து கொள்ளுங்கள் ஜானி, எதாவது ஒரு பொருளை விற்க சொல்ல போறாரு என்று கூறினேன். எல்லாம் நன்றாக விசாரித்து விட்டதாக ஜானி கூறினார். வருகின்ற சனிக்கிழமை கிண்டியில் உள்ள ஒரு காபி ஷாப் இல் சந்திக்கலாம் என்று கார்த்திக் கூறியதாக ஜானி கூறினார். எனக்கு இந்த MLM மார்க்கெட்டிங் கண்ட பொருளை விற்பதில் எந்த ஒரு ஆர்வமும் கிடையாது. காபி ஷாப் சனிக்கிழமை என்று கூறிய உடன் சந்தேகம் அதிகமானது. அண்ணன் ஜானி மீது நம்பிக்கை அதிகம். எல்லாம் நன்றாக விசாரித்து இருப்பார் என்று நம்பிக்கையில் நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். எனவே சனிக்கிழமை அந்த காபி ஷாப் போகலாம் என்று முடிவு செய்தேன்.

 கார்த்திக் கூறிய அந்த காபி ஷாப் க்கு சென்று விட்டேன். உள்ளே நுழைந்த போது, அங்கு ஒரு சிலர் உட்காந்து இருந்தனர். ஏதோ ஒரு sales நடக்கின்றது என்று மட்டும் புரிந்து கொண்டேன். பெரும்பாலும் இந்த காபி ஷாப்பில் காதலர்களை விட, கண்ட பொருளை விற்கும் களிசடைகள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நானும் நண்பர் ஜானி மற்றும் கார்த்திக் ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். மாத சம்பளம் போக எவ்வளவு வருமானம் வந்தால் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டார் கார்த்திக். இந்த கேள்வியை கேட்ட உடனே புரிந்து கொண்டேன் இது ஏதோ ஒரு sales தான் போல என்று. இருந்தாலும் பொறுமையாக, 40000 ரூபாய் வேண்டும் என்றேன். நண்பர் ஜானி ஏதோ ஒரு தொகையை கூறினார். அந்த தொகை கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கார்த்திக் கேட்டார். நான் tour செல்வேன் என்றேன், நண்பர் ஜானி முதலீடு செய்வேன் என்றார். நீங்கள் நினைத்தது நடக்கும் என்று கூறினார் கார்த்திக்.

 "ஒரு பொருள் உள்ளது. அந்த பொருளுக்கு A என்று வைத்து கொள்வோம். அந்த A என்ற பொருளை நீங்கள் விற்க விற்க உங்களுக்கு லாபம் வரும். தேடி போய் விற்க வேண்டாம். உங்களை தேடி வந்து இந்த பொருளை வாங்குவார்கள்.." என்று கார்த்திக் கூறினார். நான் ஆர்வ மிகுதியில் A என்ற அந்த பொருளின் பெயர் என்ன என்று கார்திக்கிடம் கேட்டேன். A for Amway என்று கூறினார். 


எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. நண்பர் ஜானி நேரடியாக கார்திக்கிடம் Amway லாம் ஒத்து வாராது என்று கூறிவிட்டார். எனக்கும் அதில் உடன் பாடு இல்லை அது நண்பர் ஜானி க்கும் தெரியும். இருந்தாலும் கார்த்திக் அவர்களிடம் அதை நான் காட்டி கொள்ளாமல், விருப்பம் இருப்பது போல நடித்தேன். நான் நடிப்பது ஜானி அவர்களுக்கு நன்றாக தெரியும். வாங்கி கொடுத்த அந்த காபி காக அமைதியாக இருந்தார். நான் விருப்பம் இருப்பது போல காட்டியதால், என் போன் நம்பரை வாங்கினார். ஜானி அண்ணன் அவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு. நான் நக்கல் செய்கிறேன் என்று அவருக்கு தெரியும். இருந்தாலும் அவர் அமைதியாக இருந்தார்.

 உங்களை நான் முதலில் விற்க அனுமதிக்க மாட்டேன். நீங்கள் முதலில் 5000 ருபாய் கொடுத்து கிட் வாங்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தினால் தான் அதை மற்றவர்களுக்கு எளிதாக கூற முடியும் என்று எவ்வாறு amway பொருளை விற்க வேண்டும் என்று கூறினார் கார்த்திக். எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. இருந்தாலும் பொறுத்து கொண்டேன்.

 இந்த amway பொருட்களை எல்லாம் நன்பர்களிடம் விற்றால் நட்பு தான் பாதிக்கும். விலை அதிகம், அளவு தரம் குறைவு என்பது தான் இந்த குப்பைகள் மீது பலருக்கும் இருக்கும் கருத்து. இது எல்லாம் தெரிந்த புரிந்த என்னிடம் வந்து விற்க முயன்றார். கஷ்ட படுத்த கூடாது என்ற ஒரே காரணித்திற்காக அமைதியாக இருந்தேன். நடப்பதை எல்லாம் பார்த்து காபி ஷாப்இல் இருக்கும் ஊழியர்களும் சிரிக்கிறார்கள். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பு நிறைவு பெற்றது.

எல்லா பேச்சு வார்த்தையும் முடிந்து வெளியே வந்தோம். ஜானி அண்ணன் அவர்களை கிண்டி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார், என்னை மட்டும் கிரோம்பேட்டை வரை வந்து விட்டு சென்றார். ஏன் என்றால், அவருக்கு நான் ஒரு potential customer.

குறிப்பு: சந்திப்புக்கு பின் 2 நாள் கழித்து போன் ஒன்று வந்து. கார்த்திக் பேசினார். இல்ல வீட்ல திட்டராங்க. அப்பறம் பாத்து கொள்ளலாம் என்று கூறி போனை வைத்து விட்டேன்... பிழைக்க ஆயிரம் வழிகள் உளள்து. கண்டதையும் விற்று உறவுகளைக் கெடுக்க வேண்டாம்...

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : கிண்டி காபி கடை Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran