praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, October 13, 2021

சென்னையும் நானும் : Live IPL CSK match at Chepauk

ஒரு சில காரணங்களுக்கு பிறகு தான், சென்னை என்ற ஒரு ஊர் ஒரு எமோஷன் போல மாற தோன்றியது. அதற்கு முக்கிய காரணம், சென்னை சூப்பர் சிங்ஸ் அணி என்று கூறலாம். சென்னை மக்களுக்கு மட்டும் இன்றி, பிற மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் CSK மீது ஒரு எமோஷனால் கனெக்ட் உண்டு என்று கூறினால் மிகையாகாது. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்தின் ஒரே முகம் தானே சென்னை?

இதற்கு முன்னால், கால்பந்து விளையாட்டில் தான் கிளப்கள் மீது ரசிகர்கள் ஒரு எமோஷனல் கனெக்ட் வைத்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கேன். எல்லா எமோஷனல் கனெக்ட் விட, இது கொஞ்சம் அதிகம். எத்தனை முறை தோற்றலும் ஜெய்தாலும், CSK மீது மக்கள் கொண்டு இருக்கும் பாசம் என்பது ஒரு தனி உணர்வு. அதற்கு மிக முக்கியமான காரணம் தோனி தான். தோனி க்கு பிறகு இந்த பாசம் எவ்வாறு இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது அளவு கடந்த ஒரு எமோஷணல் கனெக்ட் கொண்ட பல கோடி ரசிகர்ளில் நானும் ஒருவன். எப்படியாவது ஒரு மேட்ச் ஆவது சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. கோடம்பாக்கத்தில் நான் இருந்த போது, என்னுடன் இருந்த அண்ணன் ஒருவர் 2 டிக்கெட் உள்ளது என்று கூறினார். டிக்கெட் விலை 1000. சென்னை vs புனே அணி மேட்ச். எதிர் அணி அவ்வளவு சுவாரசியமான அணி கிடையாது, இருந்தலும் அந்த வாய்ப்பை தவர விட மணம் இல்லை.

மேட்ச்க்கு முன்னரே நானும் என் நண்பன் deepak  T நகர் சென்று CSK அணியின் T-shirt வாங்கி கொண்டோம். மேட்ச் நாள் வந்தது. அன்று அலுவலக தினம். அலுவலகம் முடிந்து இரண்டு பேரும் ஒரு பொதுவான இடத்தில் சந்திப்பது( அண்ணா அறிவாயலாம்) என்று முடிவு செய்தோம். எனக்கு இன்னும் நன்றாக நியாபகம் உள்ளது, அறிவாயலாம் முன்பு தான் நாங்கள் எங்கள் CSK T-shirt யை மாற்றினோம். ஒரு ஆட்டோ பிடித்து சேப்பாக்கம் சென்று அடைந்தோம்.

 சேப்பாக்கம் ஒரு திருவிழா கோலம் பூண்டு இருந்தது. பார்த்த திசை எல்லாம், CSK வாக தான் இருந்தது. CSK கொடி ஒன்றை அங்கு வாங்கி கொண்டு stadium உள்ளே நுழைந்தோம். அது தான் என் முதல் லைவ் அனுபவம். நாங்கள் செல்லும் போது மேட்ச் ஆரமித்து எல்லாரும் விளையாடி கொண்டு இருந்தார்கள். டிவியில் கண்ட மிக பெரிய தோனி ஒரு சின்ன உருவத்தில் கண் முன்னே இருந்தார். தோனியின் முடியை வைத்து தான், அது தோனி என்று ஒரு முடிவுக்கு வந்தோம். டிக்கெட் விலை குறைவு என்பதினால் தான் எல்லாரும் Gulliver's travel கதையில் வரும் lilliputtans போல இருந்தார்கள். நாங்கள் மிக நன்றாக பார்த்த ஒரு பிளேயர் என்றால், அது Bravo தான். ஏன் என்றால், அவர் தான் எங்கள் stand அருகில் வந்து நின்றார். ஒவ்வொரு ஓவர் முடிவில் தமிழ் பாடல்கள். என்று சிறப்பாக இருந்தது. டிவியில் பார்ப்பதை விட, ஆரவாரம் சற்று அதிகமாக தான் இருந்தது.

நாங்களும் மேட்ச் பார்க்க சென்றோம் என்பதை காட்ட, எல்லாரும் போட்டோ எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு போட்டோ எடுத்து கொண்டோம். சொல்ல மறந்து விட்டேன், நாங்கள் CSK கொடி மட்டும் வாங்கவில்லை, கலர் கலர் விக்கும் வாங்கினோம். அந்த விக்கு வைத்து எடுத்த புகைப்படம் தான் இது.

புனே அணி அப்போது தான் வந்து இருந்து. எனவே பலரும் அந்த மேட்ச் காண பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எப்படியும் CSK வென்று விடும் என்று இருந்த எங்களுக்கு, புனே அணி மிக பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது..ஆம், அன்று புனே அணி வென்று விட்டது. CSK விற்கு அதிர்ச்சி தோல்வி. நாங்கள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. நாங்கள் சென்று மேட்ச் இல் CSK தோற்றது வருத்தம் என்றாலும், நேரடியாக மேட்ச் பார்க்க சென்றோம் என்ற மிகழ்ச்சி உடன் பஸ் ஏறி மீண்டும் கோடம்பாக்கம் வந்து சேர்ந்தேன்.

சம்பவம் நடந்தத வருடம்: கிமு 2013

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : Live IPL CSK match at Chepauk Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran