praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, December 21, 2021

நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவ காரணம் என்ன?

கேள்வி: நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவ காரணம் என்ன?

பதில்:

புதிகாக உருவாக்கப்படும் இயக்கம் என்பது, மெல்ல மெல்ல தான் வளரும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தேர்தலில் வாங்கும் வாக்குகள் தான் வளர்ச்சியை தீர்மானிக்கும். ஏற்கனவே பெற்ற வாக்கு வங்கியை தக்க வைப்பதில் மற்றும் புது வாக்கு சதவீதத்தை பெருக்கவத்திலும் தான் ஒரு கட்சியின் உள்ளது. இருப்பவர்களை தக்க வைப்பது + புதிய நபர்களை ஈர்ப்பது. இது தான் ஒரு கட்சியை வளர்ச்சி அடைய வைக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்,

முதல் தேர்தலில் 2% வாக்கு வாங்கினால் அடுத்த தேர்தலில் முதலில் வாங்கிய 2 + 4 = 6 சதவீத வாக்குகள் வாங்க வேண்டும். அதற்கு பெயர் தான் வளர்ச்சி. இது எதை குறிக்கும் என்றால், அந்த கட்சி யின் நிரந்தர வாக்கு வங்கியை குறிக்கும். ஒரு கட்சி நிரந்தர வாக்கு வங்கி இருந்தால் தான் ஆட்சிக்கு வரும். நாம் தமிழர் கட்சியின் வாங்கிய வாக்கு வங்கி வளர்ச்சியை பார்க்கலாம்.

2016 சட்டமன்ற தேர்தல் - 1.3%

2019 நாடாளுமன்ற தேர்தல் - 4%

2021 சட்டமன்ற தேர்தல் - 6.8%

2016ஆம் ஆண்டு அது புது கட்சி. எனவே அந்த தேர்தலை தவிர்த்து விடலாம். 2019 ஆம் ஆண்டு 4% வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சி, 2021 ஆம் ஆண்டு 4% + 8% =12% வாங்கி இருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கு 7%(6.8). இது எதை குறிக்கிறது என்றால், புது வாக்காளர்களை ஈர்க்கவும் இல்லை இருக்கின்ற வாக்க்களர்களை தக்க வைக்கவும் இல்லை என்பதை தான் குறிக்கின்றது.


சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், 17 வயதில் சீமான் அவர்களின் உணர்ச்சிமிக்க பேச்சை கேட்டு நாம் தமிழர் கட்சி க்கு வாக்கு அளித்த வாக்காளர், அடுத்த தேர்த்திலுக்குள் இதுவும் ஒரு டுபாக்கூர் கூட்டம் என்பதை புரிந்து கொண்டு வெற்றி பெரும் கட்சியின் வாக்கு வாங்கியாக மாறி விடுகிறார்கள். இது தான் நடக்குது.

இதில் இருந்து மீண்டு, நாம் தமிழர் கட்சி பலப்பட வேண்டும் என்றால்

  1. சீமான் தமிழர் கட்சியில் இருந்து உண்மையான நாம் தமிழர் கட்சியாக மாற வேண்டும்.
  2. சீமான் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்.
  3. மொழி வெறுப்பு அரசியலை கை விட வேண்டும்.
  4. போர் எல்லாம் முடிந்து 10 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. எனவே ஈழ கதைகளை சுருக்கி கொள்ள வேண்டும்.

இதை செய்தாலே போதும், கட்சி தானாக வளரும். இல்லை என்றால், அது RSS யின் தமிழ் நாட்டின் கிளையாக தான் இருக்கும்.

அவன் மதம் என்ற மிருகம் என்றால், இவன் இனம் என்ற மிருகம். அவ்வளவு தான் வித்தியாசம்.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவ காரணம் என்ன? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran