praveenkumar558@gmail.com
Follow on
Thursday, December 23, 2021

அடிக்கடி கம்பெனி மாறுவது நல்லதா?

கேள்வி: அடிக்கடி கம்பெனி மாறுவது நல்லதா?

பதில்:

முந்தைய தலைமுறை ஊழியர்களை விட, இந்த தலைமுறை ஊழியர்களிடம் அதிகம் இருக்கும் ஒன்று தான் இந்த அடிக்கடி company மாறுவது. பெரும்பாலான ஊழியர்கள் அடிக்கடி company மாறுவதற்கு முக்கியமான மற்றும் ஒரே காரணம்

"பணம்"

பணம் எல்லாம் காரணம் கிடையாது, company பிடிக்கவில்லை மேனஜர் பிடிக்கவில்லை அல்லது project பிடிக்க வில்லை என்று கூறுவது எல்லாம் மிக சொற்பம். இந்த காரணங்களுக்காக ஒருவர் company மாறிக்கொண்டு கொண்டு இருந்தால், மாறிக்கொண்டே தான் இருப்பார்கள். காரணம், சொந்த தொழில் தவிர வேறு எதிலும் நமக்கு பிடித்தார் போல 100% பிடித்து இருக்காது. எதாவது ஒரு குறை இருக்க தான் செய்யும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மேனஜர் பிடித்து இருக்கும் company பிடித்து இருக்காது. இல்லை என்றால் நல்ல கம்பெனி யாக இருக்கும், மேனஜர் சரி இருக்காது. இப்படி ஏதாவது குறைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே இந்த காரணங்களை நாம் தவிர்த்து விட்டு, பணக் காரணங்கள் பற்றி பார்க்கலாம்.

வேலைக்கு என்று சேர்ந்த பிறகு ஒருவர் இரண்டு முக்கியமான விடயங்களை சாம்பாரிக்க வேண்டும்,

  1. பணம்
  2. அனுபவம்.

இரண்டும் ஒரே அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் பலரும் செய்யும் தவறு, பணத்திற்காக அனுபத்தை இழக்கிறார்கள். கூடுதலாக பணம் கிடைகின்றது என்பதற்காக, ஒரு நல்ல அனுபவம் பெறுபதற்குள் வேலையை மாற்றி விடுவார்கள். ஒரு கட்டத்தில், அடிக்கடி வேலையை மாற்றும் வேலையில் இறங்கி விடுவார்கள். இப்படி இருப்பவர்கள், அனுபவத்தை மட்டும் இன்றி எந்து ஒரு நண்பர்களையும் சம்பாரிக்க மாட்டார்கள். பணத்திற்காக கம்பெனி ஓடி(நாடோடி) வாழ்க்கை வாழ்வார்கள். என்னை பொறுத்தவரை எது சரி என்றால், நல்ல அனுபவம் பெற்ற பிறகு கூடுதல் ஊதியத்திற்கு செல்லலாம்.


குறைந்தது ஒரு வேலையில் 2 அல்லது 3 வருடம் இருந்தால் தான் ஒரு அளவிற்கு அனுபவம் கிடைக்கம். அவ்வாறு இருந்து விட்டு மற்றொரு வேலைக்கு சென்றால், நல்ல ஊதியமும் கிடைக்கும்.

குறிப்பு: ஒரே வேலையில் இருந்து விட்டால் போர் அடிக்கும், பணம் அதிகம் சம்பாரிக்க முடியாது. எனவே, சரியான நேரத்தில் சரியான அனுபவம் பெற்ற பிறகு வேலையை மாற்றுவது நல்லது.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அடிக்கடி கம்பெனி மாறுவது நல்லதா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran